சஷ்டியில் என்ன செய்யலாம்?

இன்றைய & நாளைய சிறப்புகள்

what will do Shasti

சஷ்டி என்பது மாதம் இருமுறை வரும். வளர்பிறை சஷ்டி, தேய்பிறை சஷ்டி என்று பெயர். சஷ்டி என்றாலோ முருகப்பெருமானுக்கு உரிய நாள். சஷ்டி அன்று விரதம் இருந்து கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வழிபட வேண்டும். இந்த விரதத்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் காரிய சித்தியும், மனத் தைரியமும் ஏற்படும். உடல் நலம் தேறும். நல்ல ஆயுளும், சகல சுகங்களும் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் கூறுகிறது. சஷ்டி அன்று நாக பூஜை நடத்துவது சிறப்பு. நாகதோஷம் உள்ளவர்கள் இந்த நாளில் பரிகாரம் செய்யலாம். அல்லது பாம்பு புற்றுள்ள கோவிலுக்குச் சென்று வழிபடலாம்.