கர்ப்போட்ட நாள் என்றால் என்ன?

ஜோதிட தகவல்கள்

what is meaning of Karpooda days

ஆண்டுதோறும் மார்கழி மாதம் காலண்டரிலோ பஞ்சாங்கத்திலோ கர்ப்போட்டம் ஆரம்பம் என்றும் கர்ப்போட்டம் நிறைவு என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கும். பூராட நட்சத்திர காலத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம்தான் கர்ப்போட்ட காலம். பூராட நட்சத்திரத்திற்கு உரிய தேவதை வருணன். வருணன் மழை தரும் தேவதை.
கர்ப்போட் காலம் பொதுவாக மார்க்கழி மாதம் 13 அல்லது 14ந் தேதி ஆரம்பமாகும். 26, 27ந்தேதி நிவர்த்தியாகும். அதாது இந்த நாளில்தான் ஆகாயம் பூமியில் உள்ள தண்ணீரை உறிஞ்சி மேகமாக தங்க வைத்துக் கொள்ளும். இதனை வானம் கர்ப்பம் தரிப்பதாக சொல்வர்கள். அந்த நாட்களில் மேகம் வானத்தில் இருக்கலாம். ஆனால் மழை பெய்யக்கூடாது. லேசாக பனித்தூறல் விழலாம். இப்படி இருந்தால் 10வது மாதமான புரட்டாசியில் நல்ல மழை பெய்யும். மாறாக இந்த கர்ப்போட்ட நாளில் மழை பெய்துவிட்டால் புரட்டாசியில் மழை இருக்காது.