கோயிலை சுத்தம் செய்வதால் என்ன கிடைக்கும்?

இன்றைய & நாளைய சிறப்புகள்

What do you get by cleaning the temple?

கோயிலை சுத்தம் செய்வது என்பது சிறந்த புண்ணியமாகும். அதற்கு உரிய நாள் வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை திதி நாள்தான். இந்த மாதம் 11/6/2021 வெள்ளிக்கிழமை அத்தகைய சிறப்பான நாள் வருகிறது. அன்றைய தினம் கோயிலுக்கு சென்று குறிப்பாக பாழடைந்த கோயிலுக்கு சென்று சுத்தம் செய்தால் நாம் ஓராண்டு காலம் அறியாமல் செய்த பாவங்கள் மறையும். மேலும் அன்றைதினம் விரதம் இருந்து அரளிபூவினால் சிவபெருமானை பூஜித்தாலும் பாவங்கள் விலகும். இந்த பிரதமை திதியில் மேற்கொள்ளும் விரதத்திற்கு கரவீர விரதம் என்று பெயர்.
இதேநாளில் விரதம் இருந்து புன்னை மர பூக்களினால் கவுரி பூஜை செய்தால் லட்சுமி கடாட்சத்துடன் சிவன்-பார்வதியின் அருளும் கிடைக்கும்.