விஜயதசமி நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, தொழில் தொடங்க நல்ல நேரம்

இன்றைய & நாளைய சிறப்புகள்

Vijayadasami day is a good time to enroll children in school and start a business

14/10/2021

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி இன்னும் திறக்கப்படவில்லை.
ஆனாலும் எல்லாப்பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து விட்டது. ஆனால் சிலர் தங்கள் குழந்தைகளை விஜயதசமி உ£டங்க சிறந்த நாள். பள்ளிக்கூடத்தில் இந்த நாளில் குழந்தைகளை பல பள்ளியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்வார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டும் விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம். பள்ளியில் சேர்க்கு முன்பு கூட விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு நாவில் எழுத்தவும் இது சிறப்பான நாள். அவர்கள் தாம்பூலத்தில் நெல்லை பரப்பி அதில் அ என்ற எழுத சொல்லிக் கொடுக்கலாம். இதை கோவிலிலும் செய்யலாம்.
இதுதவிர புதிய தொழில் தொடங்க, புதிய படிப்பை ஆரம்பிக்க, புதிய கலையை பயில இந்த நாள் சிறப்பான நாள். மாணவர்கள் கம்ப்யூட்டர் தொடர்பாக எதையும் கற்கவும் இது சிறப்பான நாள்.
இந்த ஆண்டு விஜயதசமி 15-10-2021 அன்று வெள்ளிக்கிழமை வருகிறது. இன்றைய தினம் கல்வியை தொடங்குவது கூடுதல் சிறப்பு. மேலும் அன்றைய தினம் சிரவண விரதம். இந்த நாளில் விரதம் இருந்தால் குழந்தைகள் வாழ்வு சிறப்பாக அமையும். அவர்கள் பெற்றோர்கள் மீது அதீத பற்றி ¬த்திருப்பார்கள். எனவே இந்த நாளில் பெற்றோர்கள் விரதம் இருந்து கடவுளை வழிபடுவதும் சிறப்பான நாள்.
அன்றைய தினம் காலை 9&15 முதல் 10&15 வரை வரையில் நல்ல நேரம். இந்த நேரத்தில் பூஜையில் வைத்து பதிய தொழிலை ஆரம்பிக்கலாம். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும் உகந்த நாள்.
வேலை செய்பவர்கள் இந்த நேரத்தில் ஏற்கனவே ஆயுத பூஜையின்போது பூஜையில் வைத்திருந்த வேலைக்குரிய ஆயுதங்களை எடுத்து பணியை தொடங்கலாம்.