வாழ்வில் முன்னேற்றத்திற்கு வராக வழிபாடு

இன்றைய & நாளைய சிறப்புகள்

Varaga perumal Pooja

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் முக்கியமான அவதாரமாக கருதப்படுவது வராக அவதாரம். ‘வராகம்’ என்பது ஆண் பன்றியைக் குறிக்கும். இரண்யாட்சன் என்ற அசுரன், உலகத்தை அழிக்கும் எண்ணத்துடன், பூமியை பாய் போல் சுருட்டிக் கொண்டு போய், கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தான்.
இதனால் இருள் சூழ்ந்த பூமியில், உலக உயிர்கள் அனைத்தும் துன்பத்தில் துவண்டன. பூமித் தாயை காப்பாற்றும்படி, தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் வேண்டினர்.
இதையடுத்து அவர் வராக அவதாரம் எடுத்துச் சென்று, கடலுக்குள் இருந்த பூமியை தூக்கிக்கொண்டு வெளியே வந்தார். அப்போது அவரை தடுத்து போரிட்ட இரண்யாட்சனையும் வதம் செய்தார்.
வராக ஜெயந்தி மே 1-ந் தேதி வருகிறது. அன்றை தினம் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபடுங்கள். அங்கே வாரக அவதார சிற்பம் இருந்தால் அதை தொட்டு வணங்குங்கள். இதனால் நல்ல முன்னேற்றம் காணலாம்.
தமிழ்நாட்டில் ஸ்ரீமுஷ்ணம், திருவிடவெந்தை ஆகிய இடங்களில் வராக பெருமாளுக்கு தனி கோவில் உள்ளது.