விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு உரிய நேரம்

இன்றைய & நாளைய சிறப்புகள்

Time for Ganesha Chaturthi Puja

9.9.2021

மாதந்தோறும் சதுர்த்தி திதி இரண்டு முறை வரும். ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி திதி நாளை நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம்.
தற்போது கொரோனா பரவலை தடுக்க கோலாகலமாக கொண்டாட அரசு தடை விதித்து உள்ளது. எனவே வீட்டில் இருந்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை 10.9.202 வெள்ளிக்கிழமை கொண்டாட இருக்கிறோம். இந்த நாளில் நாள் முழுவதுமே விநாயகரை வழிபடலாம். ஆனாலும் இந்த நாளில் காலை 6 மணி முதல் 9 மணிவரை, காலை 10 மணி முதல் 10.30 மணிவரை, பகல் 1 மணி முதல் 3 மணிவரை, சில குடும்பங்களில் விநாயகரை மாலையில் வழிபடும் வழக்கம் உண்டு. அவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் செய்யலாம். இது உத்தமம்.