திருவள்ளுவர் ஓர் இந்து-தமிழக அரசு ஒப்புதல்

ஆன்மிக தகவல்கள்

Thiva pulavar Thiruvaluvar one of the hindu poest

10.9.2021

கோவில்களின் தேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்தம் ஆகியவற்றுடன் திருக்குறள் வகுப்பும் நடத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 31-8-2021 அன்று சட்டசபையில் அறிவித்தார். தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசும்போது இதனை அறிவித்தார்.
அன்றைய தினம் மொத்தம் 20 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில் இந்த ஒன்று மட்டும்தான் இந்து கோவில்கள் தொடர்பானது.
அமைச்சரின் இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. திருக்குறளை பொதுமறை என்று அனைவரும் போற்றுகிறோம்.
திருவள்ளுவர் இந்துவா என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பல மதத்தினர் ஆய்வு கட்டுரைகள் எழுதி உள்ளனர். ஆனால் தெய்வப்புலவர் என்ற அடை மொழிக்கு உண்மையான அங்கீகாரத்தை கொடுப்பது இந்துக்கள்தான். அவருக்கு சென்னை மயிலாப்பூரில் அந்த காலத்திலேயே கோவில் உண்டு. அங்கு முறைபடி பூஜைகள் நடைபெறுகிறது.
திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு என்பது செவிவழிச் செய்திகள் என்றாலும் அவரோடு அவ்வையாரை தொடர்பு படுத்தி சொல்லப்படுகிறது.
அதனால்தான் இந்துக்கள் சிலர் திருவள்ளுவரின் உடைக்கு காவி நிறம் போட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் இப்போது இந்துக் கோவில்களில் திருக்குறள் பாடம் நடத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்ததால் அவர் ஓர் இந்து என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் என்றே சிலர் பொருள் கொள்கிறார்கள்.
திருக்குறள் பொதுமறைதானே அப்படி என்றால் எல்லா வழிபாட்டுத்தலங்களிலும் திருக்குறள் வகுப்பை நடத்தலாமே? என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில்தானே அரசு இப்படி உத்தரவிட முடியும் என்பதுதான். அதுவும் உண்மைதான்.
எது எப்படியோ திருக்குறள் பாடம் நடத்த எந்த கோவில்களிலும் யாரும் தடை சொல்ல மாட்டார்கள். மனமுவந்து ஏற்றுக் கொள்வார்கள். பாடம் கற்கவும் முன்வருவார்கள்-.
அதோடு அந்த கோவில்களில் சிறிய அளவிலாவது ஒரு திருவள்ளுவர் சிலையை வைத்து பூஜை நடத்தவும் ஏற்பாடு செய்யலாமே-. அரசு இதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கடையம் பாலன்