அட்சய திருதியை சிறப்புக்கு காரணம் என்ன? தங்கத்தற்குப் பதில் என்ன வாங்கலாம்?

இன்றைய & நாளைய சிறப்புகள்

Special of Adshaya thiruriyai

14.5.2021
ஒவ்வொரு தமிழ் மாதமும் திதி என்பது இருமுறை வரும். சித்திரை மாதம் வளர்பிறை நாளில் வரும் திருதியை திதி நாளை நாம் அட்சய தருதியாக கொண்டாடுகிறோம். திருமணத்திற்போது மணமக்கள் மீது மஞ்சள் தடவிய முனைய முறியாத அரிசியை போடுவார்கள். அந்த அரிசிக்குத்தான் அட்சதை என்று பெயர். பெருமாளுக்கு முனை முறியாதை அரிசியை படைத்து வணங்கும் நாள் இது.
இன்றைய தினம் எதைத் தொடங்கினாலும் அது சிறப்பாக அமையும்.

பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றார்கள் அல்லவா? அப்போது சூரியன் மூலம் திரவுபதிக்கு அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் கிடைத்தது. அது இந்த நாளில்தான்.

பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை சிவபெருமான் கொய்தததால் அவர் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளானார். அவரது திருவோடு என்று நிறைகிறோ அப்போதுதான் அவர் கையில் இருந்த திருவோடு மறையும் என்று சாபம். அந்த திருவோட்டில் யார் அன்னமிட்டாலும் நொடிப்பொழுதில் மறைந்து போகும். அதில் அன்னபூரணி தானியத்தை போட திருவோடு நிறைந்து சிவபெருமானின் கையில் இருந்து அகன்றது. அந்த புண்ணிய நாள் இது.

மகாபாரதத்தில் குசேலருக்கு கண்ணன் செல்வத்தை கொடுத்த நாள் இது என்றும் கூறப்படுகிறது.

இந்த நாளில்தான் மகாவிஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராம அவதாரம் நிகழ்ந்தது.
இன்று ( 14.5.2021) திருதியை திதியும், மிருகசீரிஷம் நட்சத்திரமும் முழுமையாக உள்ளன. இந்த நாளில் நாம் மங்களகரமான பொருளை வாங்கி பூஜை அறையில் வைத்தாலேபோதும். உதாரணமாக உப்பு-மஞ்சள் வாங்கலாம். மங்களம்தான் ஒவ்வொருவர் வாழ்நாளிலும் நீடிக்க வேண்டும். அதன் மூலம் தங்கள் வாழ்வை வளமாக்கி கொள்ளலாம். எனவே இன்றைய தினம் தங்கம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.