வெற்றிலை போடும்போது இதை கவனியுங்கள்

ஆன்மிக தகவல்கள்
Notice this when eat the tambourine

வெற்றிலையின் மகத்துவம் தெரிந்துதான் அதை இறை வழிபாட்டுக்கு முக்கிய பொருளாக வைத்தனர். பூஜைக்கு வெற்றிலை பாக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும்.  ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை மிகவும் உகந்தது. சீதாதேவி வெற்றிலையால் அனுமனை ஆசிர்வதித்ததாக கூறப்படுகிறது. அதனால் வெற்ளிலை மாலை சாத்தி அனுமனை வணங்கினால் கேட்டது கிடைக்கும் என்பது ஐதீகம்.
 அதுமட்டுமின்றி மங்களகரமான நிகழ்ச்சியிலும் துக்க நிகழ்ச்சியிலும் வெற்றிலை இடம் பெறும். அந்த காலணத்தில் புதுமணத்தம்பதியர் வெற்றிலை போடுவதை ஒரு சடங்காக வைத்திருந்தனர்.  
 அப்படியானால் வெற்றிலை பல்வேறு சிறப்புகளை கொண்டது என்பதை நாம் உணரலாம்.
 வெற்றிலையில் இரும்பு சத்து உள்ளது. வெற்றிலை போடுவது சுறுசுறுப்பை தரும். ஜீரணத்தை துரிதப்படுத்தும். வாய் மணக்கும். கலக்கத்தை போக்கும். 
 ஆனால் வெற்றிலை போடுவதில் சில கட்டுபாடான சமாச்சாரங்கள் தர்ம சாஸ்திரம் சொல்கிறது. சாப்பிட்டு முடித்ததும் வெற்றிலை போடவேண்டும். விருந்து கொடுத்த பின்னர் வெற்றிலை கொடுப்பது நல்லது. பாக்கிலும் சத்து உள்ளது. ஆனால் பாக்கை அளவுக்கு அதிகமாக உபயோகித்தால் நோய் வரும்.
  வெற்றிலையில் நுனி, நடுவில்  உள்ள காம்பு போன்றவற்றை நீக்க வேண்டும். வெற்றிலையின் பின்புறம் சுண்ணாம்பு தடவி, பாக்கு சேர்த்து, சுண்ணாம்பு தடவிய பகுதியை உள்புறமாக வைத்து மடித்து வாயில் இட்டு மெல்லவும். 
 பகலில் சுண்ணாம்பு கொஞ்சம் அதிகமாகவும், காலையில் பாக்கு சற்று அதிகமாகவும், மாலையில் வெற்றிலை அதிகமாகவும் இருக்க வேண்டும்.
 வெற்றிலையை அதிகமாக உபயோகப்படுத்தினால் பற்களிலும், கண்களிலும் நோய் உண்டாகும் என்றும் எச்சரிக்கிறது.
 வெற்றிலையை பிரம்மச்சாரிகள், துறைவிகள், விரதம் இருப்பவர்கள் போடக்கூடாது. 
 -கடையம் பாலன்.