வேலை பெற்றுத்தரும் மாங்காடு வழிபாடு

ஆலய சிறப்புகள்

Maankadu – Worship available at Job
தற்போது வேலை இல்லாமல் பலர் அவதிபடுகின்றனர். சிலருக்கு படிப்புக்கு தகுதியான வேலை கிடைப்பது இல்லை. அவர்கள் வேலை கிடைக்க சென்னை அருகே உள்ள மாங்காடு சென்று வந்தால் கண் கண்ட பலன் கிடைக்கும். அவர்கள் தொடர்ச்சியாக 6 வாரம் செவ்வாய்க்கிழமை சென்று அம்மனை வழிபட வேண்டும். அதே போல் திருமணம் கைகூட செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் தொடர்ந்து 6 வாரம் தொடர்ந்து சென்று வந்தால் நல்ல வரனாக கிடைக்கும்.

கைலாயத்தில் ஒருமுறை பார்வதி தேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடிவிளையாண்டார். இதனால் உலகமே ஒரு விநாடி இருண்டுபோனது. இதன் காரணமாக சிவபெருமானின் கோபத்திற்கு ஆளான பார்வதி தேவி மீண்டும் பூமியி்ல் அவதரிக்க வேண்டிய நிலை எற்பட்டது.
அன்னை பார்வதி, சிவபெருமானுடன் மீண்டும் இணைவதற்காக தவமிருந்த தலம்தான் மாங்காடு. அன்னை பார்வதி மாங்காட்டில் வந்து நெருப்பில் தவமிருந்தாள். ஆனால் சிவபெருமான் முன் தோன்றி காஞ்சிபுரத்திற்கு சென்று தவம் இருக்கும்படி கூறினார். அதன்படி பார்வதி தேவி காஞ்சிபுரம் சென்று தவம் இருந்தார். பார்வதி தேவியார் இந்த இடத்தை விட்டு சென்றாலும், நெருப்பு மட்டும் அணையவில்லை. இதனால் ஆதி சங்கரர் இங்கு வந்து அர்த்தமேரு சக்கரத்தை நிறுவினார். இதன் மூலம் மாங்காடு குளிர்ந்தது.