தட்சிணாய புண்ணிய காலம் பற்றி அறிந்து கொள்வோம்

இன்றைய & நாளைய சிறப்புகள்
Let us learn about the Dakshinaya holy period
16.7.2021
 சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறது. ஆனால் எப்போதும் நேர் கிழக்கில் உதித்து நேர்  மேற்கில் மறையாது. சூரியன் நேர் கிழக்கில் இருந்து தென்திசையில் இருக்கும் ஆறு மாத காலம் தட்சிணாய காலம் என்று அழைக்கப்படுகிறது. நேர் கிழக்கில் இருந்து வட திசையில் இருக்கும் ஆறு மாத காலம் உத்தரயாண காலம் என்று பெயர். 
 ஆடி மாதத்தில் இருந்து சிறிது சிறிதாக தென்நோக்கி செல்லும். தென்கிழக்கு எல்லைக்கு சென்ற பின் ஐப்பசி மாதம் முதல் மீண்டும் நேர் கிழக்கு திசை நோக்கி படிப்படியாக வரும். 
 அதன்பின் தை மாதம் 1-ந் தேதி நேர் கிழக்கு திசைக்கு வரும். அதன்பின் சிறிது சிறிதாக வடக்கு நோக்கி நகரும். சித்திரை  மாதம் 1-ந் தேதி வடகிழக்கு எல்லையில் இருந்து நேர் கிழக்கு நோக்கு நகரும்.
 இன்று சூரியன் நேர் கிழக்கில் இருந்து தெற்கு நோக்கி நகரத் தொடங்கும். எனவே இந்த நாளில் தட்சிணாய புண்ணியகாலம் என்று பெயா்.
 ஆடி முதல் மார்கழி மாதம் வரை அதாவது சூரியன் தென்திசையில் இருக்கும் காலம் தட்சிணாய  காலம் என்று பெயர். இந்த காலம் தேவர்களுக்கு இரவு நேரம். அதன்பின் தை முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் உத்தராயண காலம். இது தேவர்களுக்கு பகல் பொழுது.
 இன்று 16.7.2021 தட்சிணாய புண்ணிகாலம் என்பதால் இன்று புனித நீராடுதல் சிறந்தது.
  பாரதத்தின், ஏழு புண்ணிய நதிகளில் தட்சிணாயன புண்ணியநதி என்ற பெருமை காவிரிக்கு மட்டுமே உண்டு. புண்ணியகாலம் தொடங்கும் இன்று பொதுமக்கள் காவிரியாற்றில் புனித நீராடி வழிபாடு செய்வார்கள்.