பாவத்தை தடுக்கும் ஏகாதசி விரதம்

ஆன்மிக தகவல்கள்

Ekadasi fasting to prevent sin

11.1.2022

விரதங்களில் ஏகாதசி விரதம் மிக முக்கியமானது. மற்ற விரதங்களை கடைபிடிக்காவிட்டால் பலன்கள் தான் நமக்கு கிடைக்காது. ஆனால் இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிக்காவிட்டால் பாவங்கள் நம்மை அண்டிவிடும் என்று புராணம் கூறுகிறது. அந்த பாவம் நம்மை தொற்றிவிடாமல் இருக்க ஏகாதசி விரதம் மேற்கொள்வது நல்லது.
பிரம்மா மனித உயிரினங்களை படைக்கும் போது பாவங்களை அங்கமாக கொண்ட பாவபுருஷன் என்பனையும் படைத்தான். அவனது கடமை மக்களை பாவச்செயல்களை செய்ய தூண்டி அவர்களை நரகத்தில் தள்ளுவதுதான். அவனுக்கு விதிக்கப்பட்ட கடமையை அவன் செய்து வந்தான். அதையும் மீறி நல்ல காரியங்களில் ஈடுபடுபவர்கள் மட்டும் தான் சொர்க்கம் சென்றனர்.
ஒருநாள் கிருஷ்ணர் எமலோகம் சென்றார். அங்கு பாவங்கள் செய்தவர்கள் நரகத்தில் துன்பப்படுவதை கண்டார். அவர்கள் மீது கருணை கொண்ட கண்ணன் அவர்களுக்கு ஏகாதசி விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறி அதை கடைபிடிக்கும் படி ஆலோசனை கூறினார். அவர்களும் ஏகாதசி விரதம் மேற்கொண்டனர். அதன்பின் அவர்கள் நரகத்தில் இருந்து மீண்டு சொர்க்கம் வந்தனர். அவர்ளை பற்றி இருந்த இன்னல்கள் மறைந்தன.
கிருஷ்ணரின் ஆலோசனையின் பேரில் எல்லோரும் சொர்க்கம் சென்று விட்டதால் நரகம் காலியாகி விட்டது. இதனால் பாவ புருஷனுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. அவன் கண்ணனிடம் சென்று தனக்கு ஏற்பட்ட நிலையை கூறினான். அதற்கு கண்ணபிரான் ஏகாதசி அன்று ஏகாதசி அன்று தானிய உணவை உட்கொள்பவர் பாவங்கள் செய்த நிலைக்கு தள்ளப்படுவர் என்று வரம் அளித்தார். எனவே ஏகாதசி அன்று தானிள உணவை தவிர்த்து விரதம் இருப்பது மிக நல்லது.