இம்மாத முக்கிய விசேஷங்கள்

1-3-2021 கரிநாள்2-3-2021 சங்கடகர சதுர்த்தி4-3-2021 சஷ்டி6-3-2021 வாஸ்து புருஷன்நித்திரை விட்டு எழுதல் ( நல்லநேரம் காலை 10.06 மணிமுதல் முதல் 12.42 மணி வரை)9-3-2021 சர்வ ஏகாதசி10-3-2021 பிரதோஷம், சிரவணவிரதம்11-3-2021 மகா சிவராத்திரி12-3-2021 போதாயனஅமாவாசை13-3-2021 அமாவாசை14-3-2021 காரடையார் நோன்பு( நல்ல நேரம் மாலை 3.30 மணிமுதல் 4.30)17-3-2021 சதுர்த்தி18-3-2021 கிருத்திகை19-3-2021 சஷ்டி, கரிநாள்24-3-2021 ஏகாதசி25-3-2021 வைணவ ஏகாதசி26-3-2021 மகா பிரதோஷம்28-3-2021 பங்குனி உத்திரம்,பவுர்ணமி, ஹோலிபண்டிகை, கரிநாள்

Continue Reading

சுபங்களை தவிர்க்க வேண்டிய நாட்கள்

இந்த மாதம் (மார்ச்) 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரும் சப்தமியை திஸ்ரோஷ்டகாதி நாளாக கருதுகிறார்கள். அன்றைய தினம் முதல் 3 நாட்கள் சுப காரியங்களை விலக்குவது நல்லது. ஆனால் தர்மங்கள் செய்ய உகந்த நாள். அன்றைய தினம் தான தர்மங்கள் செய்தால் அதன் பலன் பல மடங்கு கிடைக்கும். அன்று முதல் மூன்று நாட்களுக்கு 5, 6,7- ந் தேதிகளில் சுபங்களை விலக்கி, மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம், திலஹோமம் செய்யலாம்.

Continue Reading

நல்ல கல்வி அறிவுக்கு பாயாச வழிபாடு

தை அமாவாசைக்கு பிறகு பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை அஷ்டமியை மகேசுவர அஷ்டமி என்று அழைப்பார்கள். அன்றையதினம் பசும் பாலில் பாயாசம் செய்து தட்சிணாமூர்த்திக்கு நிவேதனம் செய்து வழிபட வேண்டும். மறுநாளும் பாரணை செய்து வணங்க வேண்டும். இப்படி செய்தால் நல்ல கல்வி அறிவு கிடைக்கும். மேலும் சொர்க்க வாசமும் பெறலாம். இந்த சிறப்புக்குரிய நாள் 6-3-2021 சனிக்கிழமை வருகிறது.

Continue Reading

புத்தாண்டு பலன்கள்

பஞ்சாங்கங்கள் அனைத்தும் 60 ஆண்டுகளை கொண்ட தமிழ் ஆண்டை சித்திரை 1-ந் தேதியை தொடக்கமாக கொண்டு கணித்துள்ளனர். இந்த சித்திரை 1-ந் தேதி (ஏப்ரல் 14-ந் தேதி) சூரியன் பூமிக்கு மிக அருகில் இருக்கும். தற்போது விகாரி ஆண்டு முடிந்து சார்வரி ஆண்டு பிறக்கிறது. இது 34-வது ஆண்டாகும். சார்வரி ஆண்டு பங்குனி மாதம் 31-ந் தேதி திங்கள் கிழமை இரவு 7.20 மணிக்கு துலாம் லக்னத்தில் புதன் ஓரையில் பிறக்கிறது.இந்த ஆண்டு கோச்சாரபடி பெரிய கிரகங்களில் […]

Continue Reading

பெண்கள் மகாலட்சுமியின் அருளை பெற…

பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவதால் ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் நீங்காத அருளைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. பெண்கள் நெற்றியில் குங்குமம் ஈடும் போது இந்த ஸ்லோகத்தை சொல்ல வேண்டும். நெற்றியில் குங்குமம் இடும் போது சொல்ல வேண்டிய குங்கும பஞ்சதசி ஸ்லோகம் குங்குமமாவது குறைகளைத் தீர்ப்பதுகுங்குமமாவது குடியினைக் காப்பதுகுங்குமமாவது குணமதளிப்பது குங்குமமாவது கொல்வினை தீர்ப்பது. விதி வினை வெல்வது விமலையின் குங்குமம்நிதிதனை ஈவது நிமலையின் குங்குமம்பதிதனைக் காப்பது பதிவிரதை குங்குமம்கதிதனையாள்வதும் குங்குமமாமே தஞ்சமென்றோரை தடுத்தாண்டு கொள்வதும்பஞ்ச மாபாதகம் […]

Continue Reading

இந்துக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது

இந்துக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது. All Hindus need to know இந்துக்களாகிய நாம் பல தலபுராணங்களையும், பல இதிகாசங்களையும்… இந்துவாக பிறந்த நாம் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்…!!! 1.தமிழ் வருடங்கள்(60)2.அயணங்கள்(2)3.ருதுக்கள்(6)4.மாதங்கள்(12)5.பக்ஷங்கள்(2)6.திதிகள்(15)7.வாஸரங்கள்(நாள்)(7)8.நட்சத்திரங்கள்(27)9.கிரகங்கள்(9)10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)11.நவரத்தினங்கள்(9)12.பூதங்கள்(5)13.மஹா பதகங்கள்(5)14.பேறுகள்(16)15.புராணங்கள்(18)16.இதிகாசங்கள்(3) இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம். தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை: 1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண […]

Continue Reading

பசித்தீர்ப்பவர்களை விமர்சிக்காதீர்கள்

பசித்தீர்ப்பவர்களை விமர்சிக்காதீர்கள் கர்ணன் இறந்த பின்பு சொர்கத்தில் பசியோடு அலைந்தாராம் ஆனால் அவர் பசி அடங்கவே இல்லை அப்போது இறைவனிடம் கேட்கிறான். கர்ணன்: இறைவா நான் பல தான தர்மங்களை செய்தேன் ஆனால் இன்று என் பசியை தீர்க்க முடியவில்லையே ஏன்? இறைவன்: கர்ணா நீ பல தான தர்மங்களை செய்தாலும் எவருக்குமே நீ அன்னதானம் வழங்கவில்லை அதாவது உணவளிக்கவில்லை ஆகையால்தான் உன் பசி தீர்க்க எவருமில்லை. ஆனால் உன் ஆள் காட்டிவிரலை வாயில் வைத்துக்கொள் பசி […]

Continue Reading

பங்குனி உத்திரம் சிறப்புகள்

பங்குனி உத்திரம் இந்த ஆண்டு 6-4-2020(திங்கட்கிழமை) அன்று வருகிறது. பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் வருகிற நாள்தான் பங்குனி உத்திரம். பொதுவாக இது பவுர்ணமியையட்டியே வரும். இந்த நாளில் பல கோயில்களில் திருக்கல்யாணம் நடைபெறும். குறிப்பாக சிவன்-பார்வதி, முருகன்-வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு – லட்சுமி ஆகியோரின் திருக்கல்யாணம் நடைபெறும். மகாலட்சுமியின் அதாவரம் நாள் உத்தரம் என்று கூறப்படுகிறது. அவர் அவதரித்ததே மகாவிஷ்ணுவை மணக்கவே. எனவே அன்றைய தினம்விரதம் இருந்து இறைவனை வணங்கினால் திருமணம் கைகூடும். அன்றை தினம் […]

Continue Reading

நல்ல இல்லற வாழ்க்கை வேண்டுமா?

பங்குனி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் துவாதசிக்கு தமனாரோபனம் என்று பெயர். அதனை விஷ்ணு தமனம் என்று அழைப்பர். ஏப்ரல் மாதம் 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று வரும் அந்த நாளில் மகாவிஷ்ணுவுக்கு மரிக்கொழுந்தினால் அர்ச்சனை செய்து வணங்கினால் புண்ணியம் கிடைக்கும். மேலும் புதன் தோஷம் உள்ளவர்கள் இந்த வழிபாட்டை நடத்தினால் தோஷம் விலகி நன்மைகள் கிடைக்கும். இந்த துவாதசி திதி தோன்றி ஒரு நாழிகை நேரம் ஹரிவாசரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலத்தில் உணவு அருந்துதல் […]

Continue Reading

ஆசைகளை நிறைவேற்றும் ஏகாதசி

பங்குனி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் ஏகாதசிக்கு காமத ஏகாதசி என்று பெயர். அதற்கு ஆசைகளையும் எண்ணங்களையும் நிறைவேற்றும் ஏகாதசி என்று பெயர். அன்றைய தினம் விரதம் இருந்து பெருமாளை வணங்கவேண்டும். மேலும் பெருமாள் கோயிலில் 11 விளக்குகள் ஏற்றி 11 முறை வலம் வந்து வணங்க வேண்டும். இப்படி செய்தால் ஆசைகள் எண்ணங்கள் நிறைவேறும். இதற்குரிய நாள் ஏப்ரல் மாதம் மாதம் 4-ந் தேதி(சனிக்கிழமை) வருகிறது.

Continue Reading