திருவண்ணாமலை கிரிவல வழிபாடு- பலன்கள்

திருவண்ணாமலை கிரிவல வழிபாட்டு பலன்கள் எங்காவது துவங்கி எப்படியாவது முடிக்ககூடாது. மலையை சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லுதல் கூடாது.. இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். மலைசுற்றும் போது கைகளை வீசிக்கொண்டும், பேசிக்கொண்டும் நடக்க கூடாது. சாதாரணமாக நமச்சிவாய நாமத்தை உச்சரித்துக்கொண்டு நடந்து செல்லவேண்டும் பலர் இந்த மலையை அங்கப்பிரதட்சணம் செய்த காலங்களும் உண்டு. இப்போதும் ஒரு சிலரும் அங்கப்பிரதட்சணம் செய்வதுண்டு.அது சாத்தியமில்லாது போது நடந்து சென்றாலே போதும். எல்லா […]

Continue Reading

108 திவ்ய தேசமான ராமர் பிறந்த அயோத்தி

மகாவிஷ்ணு எழுந்தருளியுள்ள முக்கிய தலங்கள் 108 திவ்ய தேசங்களாக புகழப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில்தான் அதிக திவ்ய தேசங்கள் இருக்கின்றன. வடமாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க திவ்ய தேசங்கள் உள்ளன. அவற்றில முக்கியமானது அயோத்தி. மகாவிஷ்ணு ராமஅவதாரம் எடுத்த புண்ணிய பூமி. எவ்வளவுதான் சிறந்த பக்தனாக இருந்தாலும், நாட்டு மக்களுக்கு எவ்வளவுதான் நன்மைகள் செய்தாலும், குடும்பத்தார் மீது எவ்வளவுதான் பாசம் வைத்திருந்தாலும் அவன் மாற்றான் மனைவி மீது ஆசை கொண்டால் அவன் அனைத்தையும் இழந்துவிடுவான் என்பதை உலகுக்கு நிரூபிக்க மகாவிஷ்ணு இன்னொரு […]

Continue Reading

ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவள் ஆண்டாள். பெரியாழ்வார் என்று புகழப்படும் விஷ்ணுசித்தர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இறைபணி செய்து கொண்டிருந்தார். தினமும் ரங்கமன்னாருக்கு மாலை தொடுத்துக் கொடுத்து பாமாலையும் பாடி வழிபட்டு வந்தார். ஒருநாள் அவர்கள் பூப்பறிக்க சென்ற போது துளசி மாடத்தில் பெண்குழந்தையை கண்டு ஆச்சரியமடைந்தார். அவளுக்கு ஆண்டாள் என்று பெயரிட்டு வளர்த்தாள். கண்ணனின் கதையை கேட்ட ஆண்டாள் அவனது விளையாட்டி மெய்மறந்து அவனை காதலிக்க தொடங்கினாள்.அனையே பற்றியே பாடுவாள். அவனையே தொழுவாள். குழந்தை பருவத்தில் தந்தை ரங்கமன்னாருக்காக தொடுத்து வைத்திருந்த […]

Continue Reading

நிறைவேறாத ஆசையை நிறைவேற்றும் பிரத்தியங்கரா தேவி

15-9-2019 சீதையை சிறைபிடித்த ராவணனுடன் போரிட ராமரின் படைகள் போரிட்ட காலம் அது. ராமரையும், லட்சுமணனையும் தன்னால் வெற்றி கொள்ளமுடியாது என்பதை ராவணனின் மகனான இந்திரஜித் அறிந்து வைத்திருந்தான். அவர்களை வெல்ல மகாபிரத்தியங்கிராதேவிக்கு யாகம் நடத்த எண்ணினான். அதற்காக அவன் நிகும்பலை என்ற இடத்தில் தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடுநிசியில் மிக ரகசியமாக இந்த யாகத்தை நடத்தினான். இந்திரஜித்தின் இந்த யாகம் அவனது சித்தப்பாவான விபீஷ்ணனுக்கு தெரியந்தது. அவன் தனது அண்ணன் ராவணனிடம் இருந்து பிரிந்து ராமர்படையில் […]

Continue Reading

மங்கலம் தரும் எருக்கம் செடி பூஜை

15-9-2019 ஒவ்வொரு மாதமும் 5 வெள்ளிக்கிழமை வருவது சிறப்பு. அதுவும் ஆடி மாதம் 5 வெள்ளிக்கிழமை வருவது அதி சிறப்பாகும். இந்த ஆண்டு அப்படி நிகழ்கிறது. அப்படி ஒரு நல்ல நாளில் நாம் சிறப்பு பூஜை செய்து வழிபட்டால் சிறப்பான பலனை காணலாம். ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி வரும் அந்த வெள்ளிக்கிழமை பெண்கள் அம்மனை வழிபடுவது சிறப்பானது. பல்வேறு பலனை அவர்கள் கிடைக்கப் பெறுவார்கள். இந்த நாள் இன்னொன்றுக்கும் சிறப்பு. அதாவது இது எமதர்மனுக்கும் சிறப்பான […]

Continue Reading