அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி

மதுரை அருகே அழகர் கோவிலில் கள்ளழகருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பக்தர்கள் வணங்குகிறார்களோ அந்த அளவுக்கு அங்கு காவல் தெய்வமாக விளங்கும் பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அந்த கோவிலின் பிரதான கோபுர வாசல் எப்போதும் அடைத்தே இருக்கும். சாத்தப்பட்டிருக்கும் அந்த கதவைத்தான் கருப்பணசாமியாக பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். அந்த கதவை திறந்து பார்த்தால் அதனுள் பதினெட்டு படிகள் இருக்கும். அதனால்தான் பதினெட்டாம்படி கருப்பணசாமி என்று அழைக்கிறார்கள்.இந்த தெய்வம் வடக்கில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே […]

Continue Reading

மகாலட்சுமி குடியிருக்கும் 108 இடங்கள்

மகாலட்சுமி அமிர்தத்திற்காக பாற்கடலை கடைந்தபோது தோன்றினாள். அவள் மகாவிஷ்ணுவின் இதயத்தில் வாசம் செய்கிறாள்.ஆனால் மகாலட்சுமி மொத்தம் 108 இடங்களில் வாசம் செய்வதாக ஐதீகம். அதாவது அருகம்புல், அகில், அட்சதை, அத்திக் கட்டை, அகத்திக்கீரை, அவல், அரச சமித்து, ஆலம் விழுது, ஆல அடிமண், ஆகாச கருடன்,ஆணின் நெற்றி, இலந்தை, எலுமிச்சை, எள், உப்பு, கண்ணாடி, கஸ்தூரி, கடுக்காய், கடல்நுரை, கலசம், கமண்டல நீர், களாக்காய், காய்ச்சிய பால், காதோலை, காராம்பசு நெய், காசினிக்கீரை, கிரீம், காளைக் கொம்புமான், […]

Continue Reading

கொரோனா இரண்டாவது அலை

கொரோனா இரண்டாவது அலை இவ்வளவு வீரிய தாண்டவம் ஆடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். வெப்பமயமான நாடு, எனவே இந்தியாவுக்குள் வராது என்று சிலர் சொன்னக் கூற்று எல்லாம் பொய்யாகிவிட்டது. இந்த வைரஸ் கிருமி காற்று, தும்பல், எச்சில், கண்ணீர் போன்ற நீர் துவலைகள் மூலம்தான் பரவுகிறது. அதாவது ஒருவருக்கு பிடித்த ஜலதோஷம் அடுத்தவருக்கு பரவுவதுபோல… சற்று அதிக கோரத்துடன் பரவுகிறது. கோடை காலத்தில் நமக்கு சளி பிடிக்காமலா இருக்கிறது. அதேபோல்தான் இந்த கொரோனா வைரசும் இந்த […]

Continue Reading

மச்ச அவதாரம் எடுத்த நாள்

பங்குனி மாதம் அமாவசைக்கு அடுத்து பவுர்ணமிக்கு பிறகு வரும் திரயோதசி(தேய்பிறை) நாளில்தான் மகாவிஷ்ணு மச்ச அவதாரம் எடுத்தார். ஆனால் அன்றைய தினம் திரயோதசி திதி மாலை 24 நாழிகைக்கு மேல் 30 நாளிகைக்குள் திரயோதசி திதி இருக்க வேண்டும். அப்படி பார்த்தால் இந்த மே மாதம் 9-ந் தேதி ஞாயிற்றுக்கிழமைதான் மச்ச அவதாரம் எடுத்த நாள் வருகிறது. மச்ச ஜெயந்தியான அன்று பெருமாள் கோவிலுக்குச் சென்று வணங்கி வருவது நல்லது.

Continue Reading

அக்கினி நட்சத்திரம்

கோடை காலத்தின் உச்சக்கட்டம் தான் அக்கினி நட்சத்திர என்றும் கத்திரி வெயில். இந்த வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் நாட்களை நம்முன்னோர்கள் அக்கினி நட்சத்திர காலம்(கத்திரி வெயில்) என்று குறிப்பிட்டு உள்ளனர், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 21-ந் தேதி தொடங்கி வைகாசி மாதம் 15-ந் தேதி முடிவடையும். இந்த ஆண்டு ஆங்கில மாதம் மே 4-ந் தேதி தொடங்கி 29-ந் தேதிவரை நீடிக்கிறது.இந்த கத்திரி வெயில் காலத்தில் சுப நிகழ்ச்சிகளைநடத்தக் கூடாது என்று பலர் கூறி […]

Continue Reading

சுபநிகழ்ச்சிகளை நடத்தலாம்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 21-ந் தேதி முதல் வைகாசி மாதம் 15-ந் தேதி வரை (4-5-2021 முதல் 29-5-2021 வரை) அக்னி நட்சத்திர காலமாக கருதப்படுகிறது. மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் அக்னி நட்சத்திரம் என்று ஒன்று கிடையாது. வெயிலின் கொடுமை அக்னி (நெருப்பு) போல் கொதிக்கும் நாட்களைத்தான் அக்னி நட்சத்திர நாட்கள் என்று அழைக்கிறோம். இதனை கத்திரி வெயில் என்றும் கூறுவார்கள். இந்த நாட்களில் பலர் சுபநிகழ்ச்சிகளை நடத்தமாட்டார்கள். ஆனால் உண்மையில் அக்னி நட்சத்திர […]

Continue Reading

சந்திர தோஷம் விலக

பலர் பவுர்ணமி அன்று விரதம் இருக்க விரும்புவார்கள். அப்படி விரதம் இருக்க விரும்புபவர்கள் சித்திரை மாத பவுர்ணமி அன்று தொடங்கலாம். சந்திரன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் சித்ரா பவுர்ணமி அன்று விரதம் இருந்து இஷ்ட தெய்வத்தை வழிபடலாம்.

Continue Reading

திருச்செந்தூரின் நாழிக்கிணறு

திருச்செந்தூரின் தனிச்சிறப்பு அங்குள்ள நாழிக்கிணறுதான். திருச்செந்தூருக்கு ஜெயந்திபுரம் என்ற பெயரும் உண்டு. சூரனை, முருகன் தனது வேலால் வதம் செய்ததார். அந்த வேலுக்கான தோஷகத்தை போக்க முருகப்பெருமான் கங்கையை வரவழைத்தார். அதுதான் நாழிக்கிணறு. நாமும் அந்த நாழிக்கிணற்றில் குளித்து பின்னர் கடலில் நீராடி முருகப்பெருமானை வணங்கினால் தோஷங்கள் அனைத்தும் நீங்கும். கடலில் நீராடிய பின்னர் வேறு தண்ணீரில் குளிக்காமல் முருகனை வணங்க வேண்டும்.

Continue Reading

பிரதோஷ வேளையில்…

பிரதோஷத்தின்போது எல்லா தெய்வங்களும், தேவர்களும் சிவாலயத்திற்கு வந்து சிவபெருமானை வணங்குவதாக ஐதீகம். அந்த நேரத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும். மேலும் பிரதோஷ பூஜைகளில் கலந்து கொண்டால் ஓராண்டு கோவிலுக்குச் சென்று வழிபட்ட பலன்கள் கிடைக்கும். சனி பிரதோஷம் அன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஐந்து ஆண்டுகள் கோவிலுக்குச் சென்ற வழிபட்ட பலன்கள் கிடைக்கும். பிரதோஷ வேளையில் சாப்பிடுதல், தூங்குதல், எண்ணெய் தேய்த்து குளித்தல் கூடாது.

Continue Reading

கழுதை வழிபட்ட தலம்

கழுதை என்று அந்த விலங்கை அலட்சியப்படுத்த வேண்டாம். கும்பகோணம் அருகே திருவாரூர் சாலையில் வடகண்டம் அருகே கரையபுரம் என்ற ஊரில் உள்ள சிவனை கழுதை வழிபட்டு பேறுபெற்றது-. இந்த ஊருக்கு கரவீரும் என்று பெயர். கரம் என்றால் கழுதை என்று அர்த்தம். இங்குள்ள சிவனுக்கு கரவீரேசுவரர் என்றும் அம்மனுக்கு கரவீரநாயகி என்றும் பெயர். இத்தலத்தில் கவுதம முனிவரும் வணங்கி அருள் பெற்றார். இத்திலத்தின் மரம் அலரி.

Continue Reading