அமிர்தமாகும் அகத்திக்கீரை! என்று சாப்பிட்டால்…?

ஆன்மிக தகவல்கள்

Akaththi Lettuce / Will become bitter

11.1.2022

கீரை வகைகள் எல்லாம் உடலுக்கு வலுவூட்டும் சத்துக்கள் நிறைந்தவை. ஆனால் அகத்திக்கீரை ஒரு மூலிகையும் கூட.. இதனை அகத்திய முனிவரின் மூலிகை என்றும் கூறுவர். அந்த அகத்திக் கீரையை துவாதசி அன்று சாப்பிட்டால் அது அமிர்தத்துக்கு ஈடான மகத்துவத்தை கொடுக்கும்.
தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலை கடந்தார்கள் அல்லவா? மேரு மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு கடைந்தனர். அப்போது வலி தாங்காமல் பாம்பு விஷத்தை கக்கியது. உலகையே அழிக்கும் வல்லமை கொண்ட அந்த ஆலகால விஷத்தை கண்டு தேவர்கள் அனைவரும் பயந்து ஓடினர். இறுதியில் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்தனர். அவர் அந்த விஷத்தை ஒன்று திரண்டி விழுங்கி உலகத்தை காத்தார். இதனை கண்ட பார்வதி தன் கணவனுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க விஷம் உடலுக்குள் இறங்காமல் இருக்க கழுத்தை அழுத்தி பிடித்தாள். அந்த விஷம் சிவனின் கண்டத்தோடு நின்று விட்டது.
பாற்கடலை கடையும் போது பாம்பு விஷம் கக்கிய நாள் தான் வைகுண்ட ஏகாதசி என்று கூறுவர். மறுநாள் துவாதசி அன்று அமிர்தம் கிடைத்தது. விஷம் தோன்றிய நாளான ஏகாதசி அன்று உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். ஏனென்றால் அன்று எல்லா பொருட்களிலும் சிறதளவேனும் விஷம் கலந்திருக்கும். மறு நாள் அதாவது அமிர்தம் தோன்றி நாள் விரத்தை முடிக்க வேண்டும். அன்று அகத்திக்கீரையை மிக நல்லது. அகத்திக்கீரைக்கு அமிர்த பிந்து என்று பெயர். அதாவது அமிர்த துளி என்று பெயர். இதை துவாதசி அன்று சாப்பிட்டால் தேவர்களுக்கு விஷ்ணு கொடுத்த அமிர்தத்தை போன்ற பலன் கிடைக்கும் என்று புராணம் கூறுகிறது.