யுகாதி அன்று கசப்பும் இனிப்பும் சாப்பிடுவது ஏன்?

இன்றைய & நாளைய சிறப்புகள்


பொதுவாக பங்குனி மாதம் அமாவாசைக்கு மறுநாள் யுகாதி என்னும் தெலுங்கு வருட பிறப்பு கொண்டாடப்படுகிறது, ஆனால் அன்றைய தினம் சூரிய உதயத்தின் போது கண்டிப்பாக அமாவாசை இருக்க கூடாது. எனவே இந்த ஆண்டு யுகாதி பண்டிகை மார்ச் மாதம் 25&ந் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது நல்லது. தெலுங்கு மொழி பேசுவோர் அன்றைய தினம் வேப்பம் பூவும் வெல்லமும் கலந்த பண்டம் செய்து சாமிக்கு படைத்து வெறும் வயிற்றில் உண்பார்கள். இனிப்பும் கசப்பும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்த்துவதற்காகவும் கசப்பான அனுபவங்கள் அனைத்தும் இனிப்பாக மாற வேண்டும் என்பதற்காகவும் இதனை உண்கிறார்கள்.