மங்கலம் தரும் எருக்கம் செடி பூஜை

ஆலய சிறப்புகள்

15-9-2019

ஒவ்வொரு மாதமும் 5 வெள்ளிக்கிழமை வருவது சிறப்பு. அதுவும் ஆடி மாதம் 5 வெள்ளிக்கிழமை வருவது அதி சிறப்பாகும். இந்த ஆண்டு அப்படி நிகழ்கிறது. அப்படி ஒரு நல்ல நாளில் நாம் சிறப்பு பூஜை செய்து வழிபட்டால் சிறப்பான பலனை காணலாம். ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி வரும் அந்த வெள்ளிக்கிழமை பெண்கள் அம்மனை வழிபடுவது சிறப்பானது. பல்வேறு பலனை அவர்கள் கிடைக்கப் பெறுவார்கள்.
இந்த நாள் இன்னொன்றுக்கும் சிறப்பு. அதாவது இது எமதர்மனுக்கும் சிறப்பான நாளாகும். சித்ராபவுர்ணமி எப்படி சித்ரகுப்தனுக்கு உகந்தநாளோ, அதேபோல் இந்த நாள் எமதர்மனுக்கு உகந்த நாளாகும்.
ஆடி 5-வது வெள்ளிக்கிழமை எமதர்மனுக்கு சிறப்பு பூஜை செய்தால் மரணபயம் போகும். பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாத பெண்கள் இந்த பூஜையை செய்தால் திருமணம் கைகூடும். மேலும் வீட்டில் செல்வ செழிப்பும் ஏற்படும். வீட்டில் துர்மரணம் நிகழாது.
அந்த பூஜையை எப்படி செய்லாம்.
வீட்டில் அருகில் எருக்கஞ்செடி இருந்தால் அந்த இடத்தில் இந்த பூஜையை செய்வது சிறப்பு. அதுவும் வெள்ளெருக்கு இருந்தால் மிகவும் நல்லது. எருக்கு செடி எமனுக்கு உகந்த விருட்சம். அந்த எருக்ஞ்செடிக்கு மஞ்சள் பூசி, பூநூல் கட்ட வேண்டும். பின்னர் உப்பில்லாத தயிர்சாதம், அல்லது உப்பில்லான வெண்பொங்கல் படைத்து வணங்க வேண்டும். மேலும் 3 மஞ்சள் கிழங்கையும் வைத்து வணங்வேண்டும். பூஜை முடிந்ததும் அந்த படையலை காக்கைக்கோ எருமை மாட்டிற்கோ உண்ண கொடுக்க வேண்டும். மஞ்சள் கிழங்கை எடுத்து வந்து பெண்கள் பூசிக் கொள்ளலாம். அல்லது அதை உரசி பொட்டாக வைத்துக் கொள்ளலாம்.
வீட்டின் அருகே எருக்கஞ்செடி இல்லை என்றால் எருக்கம் குச்சியை எடுத்து வந்து அதற்கு மேற்சொன்ன பூஜையை செய்யலாம். பூஜை முடிந்த பின்னர் அந்த எருக்கு குச்சியை தண்ணீரில் போட்டுவிடவும். அல்லது யாகம் நடத்த கொடுத்துவிடவும்.
நீண்ட நாள் குணமாகாமல் இருக்கும் நோயாளி ஒருவர் இந்த பூஜையை செய்தால் அவர் பூரண குணம் அடைவார்.
இந்த பூஜை செய்வதோடு அன்றைய தினம் எருமை மாட்டிற்கு உணவு கொடுப்பதும் சாலச்சிறந்தது.
-ஆர்.எம். சிவா
போன் 9865058839