மகாலட்சுமி குடியிருக்கும் 108 இடங்கள்

ஆன்மிக தகவல்கள்


மகாலட்சுமி அமிர்தத்திற்காக பாற்கடலை கடைந்தபோது தோன்றினாள். அவள் மகாவிஷ்ணுவின் இதயத்தில் வாசம் செய்கிறாள்.
ஆனால் மகாலட்சுமி மொத்தம் 108 இடங்களில் வாசம் செய்வதாக ஐதீகம். அதாவது அருகம்புல், அகில், அட்சதை, அத்திக் கட்டை, அகத்திக்கீரை, அவல், அரச சமித்து, ஆலம் விழுது, ஆல அடிமண், ஆகாச கருடன்,ஆணின் நெற்றி, இலந்தை, எலுமிச்சை, எள், உப்பு, கண்ணாடி, கஸ்தூரி, கடுக்காய், கடல்நுரை, கலசம், கமண்டல நீர், களாக்காய், காய்ச்சிய பால், காதோலை, காராம்பசு நெய், காசினிக்கீரை, கிரீம், காளைக் கொம்புமான், கீரிப்பிள்ளை, நெல்லி, குங்குலியப் புகை, குளவிக் கூட்டு மண், நெற்றி, கொப்பரைத் தேங்காய், கொம்பரக்கு, நிறைகுடம் கூந்தப்பனை, கோவில் நிலை மண், மாவடு, சந்திரக்காந்தக் கல், சங்கு, சங்குபுஷ்பம், சந்தனம், யானை மணி நாக்கு, மாதுளை, நன்னாரிவேர், சிருக்சுருவம், சோளக்கதிர், சாளக்கிராமம், நாயுருவி, நெற்கதிர், நுனி முடிந்த கூந்தல்,பட்டு, பவளமல்லி, பஞ்சகவ்யம், பாணலிங்கம், பாக்கு,பச்சைக் கற்பூரம், பஞ்சபாத்திரம், பட்டு, பவளமல்லி, பாணலிங்கம், பாக்கு, பச்சை கற்பூரம், பஞ்சபாத்திரம், புனுகு, பாகற்காய்,பசலைக்கீரை, வரகு, பசுநீர்த்தாரை, படிக்காரம், விபூதி, புற்றுத்தேன், பூரண கும்பம், பிரம்பு, பெண்ணின் கழுத்து, பூணூல், ஜெபமாலை, பூலாங்கிழங்கு, பன்றிக் கொம்பு, தங்கம், மலைத்தேன், மூங்கில், மோதகம், மோதிரம்(தந்தம்), வைரம், தர்ப்பை, தையல் இல்லாத புதுத் துணி, தாழம்பூ, துளசி, நண்டுவளை மண், தாமரை, தேவதாரு, வலம்புரி சங்கு, குலைவாழை, வில்வம், வில்வஅடி மண், வெட்டிவேர், வெள்ளி, விளாமிச்ச வேர், விளாம்பழம், ருத்ராட்சம், வெள்ளரிப்பழம், வாசல் நிலை, வெயிலுடன் கூடிய மழை, திருமாங்கலம், தென்னம்பாளை, திருநீற்றுப் பச்சை, தேங்காய்க் கண், யானைக் கொம்புமண், வெற்றிலை மேற்புறம், தாமரை மணி உள்பட 108 இடங்களில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். &தகவல் சக்தி. விண்மணி, போடிநாயக்கனூர்.