புத்தாண்டு பலன்கள்

மாத இதழ்கள்
  ஸ்ரீசார்வரி ஆண்டு


பஞ்சாங்கங்கள் அனைத்தும் 60 ஆண்டுகளை கொண்ட தமிழ் ஆண்டை சித்திரை 1-ந் தேதியை தொடக்கமாக கொண்டு கணித்துள்ளனர். இந்த சித்திரை 1-ந் தேதி (ஏப்ரல் 14-ந் தேதி) சூரியன் பூமிக்கு மிக அருகில் இருக்கும். தற்போது விகாரி ஆண்டு முடிந்து சார்வரி ஆண்டு பிறக்கிறது. இது 34-வது ஆண்டாகும். சார்வரி ஆண்டு பங்குனி மாதம் 31-ந் தேதி திங்கள் கிழமை இரவு 7.20 மணிக்கு துலாம் லக்னத்தில் புதன் ஓரையில் பிறக்கிறது.
இந்த ஆண்டு கோச்சாரபடி பெரிய கிரகங்களில் குருபகவான், சனிபகவான், ராகு-கேது பெயர்ச்சி அடைகிறார்கள்.தற்போது குருபகவான் அதிசாரம் பெற்று மகர ராசியிலும்,சனிபகவான் தனுசு ராசியிலும், ராகு மிதுன ராசியிலும்,கேது தனுசு ராசியிலும் இருக்கிறார்கள். மகர ராசியில் இருக்கும் குருபகாவன் 7-7-2020 அன்று அதிசாரம் முடிந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.அங்கு அவர் 13-11-2020 வரை இருப்பார். அதன்பிறகு மகர ராசிக்கு மாறுகிறார். தற்போது தனுசு ராசியில் இருக்கும் சனிபகவான் 1-5-2020 அன்று வக்கிரம் அடையத் தொடங்குவார். சனிபகவான் வக்கிரம் அடைந்தாலும் அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் தனுசு ராசிக்குள்ளேயேஇருக்கிறார்.16-9-2020 வக்கிர நிவர்த்தி அடைகிறார். சனிபெயர்ச்சி (2020) டிசம்பர் மாதம் 26-ந் தேதி அன்று நடக்கிறது. அப்போது அவர் மகர ராசிக்கு மாறுகிறார். தற்போது மிதுன ராசியில் இருக்கும் ராகு 31-8-2020 அன்று ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். தனுசு ராசியில் இருக்கும் கேது 31-8-2020 அன்று விருச்சிகராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இவையாவையும் கருத்தில் கொண்டே இந்த புத்தாண்டு பலன் கணிக்கப்பட்டு உள்ளது.
இங்கே ஒவ்வொரு ராசியினருக்கும் பரிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. உங்களால் இயன்ற பரிகாரத்தை செய்தால் போதும். பணத்தைக் கொட்டித்தான் பரிகாரம் செய்ய வேண்டும் என்பது இல்லை. பரிகாரம் செய்வதால் கெடுபலன்கள் குறைந்து நன்மை அதிகரிக்கும். மனதில் நிரந்தர மகிழ்ச்சி நிலவும்.
மேஷம்
மேஷ ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டின் தொடக்தில் குரு, சனி பார்வைகளால் உற்சாகமகா அமையும். உங்கள் முயற்சியில் தடைகள் வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். மனதில் இருந்த உளைச்சல் மறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். சகோதரிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.அவர்களால் பொருள் சேரும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். இருப்பினும் ஜூலை 7-ந் தேதி வரை செலவு அதிகரிக்கும்.
உத்தியோகம்- வேலையில் பளு அதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும். அதே நேரம் உழைப்புக்கு தகுந்த வருவாய் கிடைக்கும்.ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு வேலைப்பளு குறையும். பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் முயற்சி செய்தால் வேலை கிடைக்க வாய்ப்யு இருக்கிறது .சக ஊழியர்கள் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காணலாம். பதவி உயர்வு கிடைக்கும். வக்கீல்கள் தொழிலில் சிறந்து விளங்குவர். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு எழுத்தாளர்கள் நல்ல புகழை காண வாய்ப்புண்டு.
வியாபாரிகள் உங்கள் ஆற்றல் மேம்படும். வியாபார விஷயமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.மேலும் சனிபகவானின் 10-ம் இடத்துப்பார்வையால் இடையூறுகள் மறையும். பெண்களை பங்குதாரர்- களாக கொண்ட வியாபாரம் தழைத்து ஓங்கும். ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு சிலர் வியாபாரத்தை விரிவுபடுத்துவர்.புதிய தொழில் நல்ல லாபத்தை தரும். அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு மறையும். சிறுதொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்துவர். உங்கள் திறைமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புகழும், பெருமையும் கிடைக்க பெறுவர். வக்கீல்கள் தொழிலில் சிறந்து விளங்குவர். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு எழுத்தாளர்கள் நல்ல புகழை காண வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் நல்ல வசதியுடன் இருப்பர்.எதிர் பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்கள் சிறப்பான பலனை காணலாம். நல்ல மதிப்பெண் பெறலாம். மேற்படிப்பு தொடரும். விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயிகள் நவீன வேளாண்மையை கையாண்டு நல்ல வருவாயை காணலாம். மஞ்சள், பனை போன்ற பயிர் வகைகளில் நல்ல மகசூல் கிடைக்கும்.பசு மற்றும் கால்நடைகள் வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். புதிய சொத்துகள் வாங்கலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கூலி வேலைகள் செய்பவர்கள் மன நிம்மதியுடன் காணப்படுவர்.
பெண்கள் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். தோழிகள் உதவிகரமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும்.உடல்நலம் ஜூலை 7-ந் தேதி வரை சிலர் மனஉழைச்சலுடன் காணப்படுவர். சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.
செப்டம்பர் மாதம் முதல்
பெரியோர்களின்ஆலோசனையை அவ்வப்போது கேட்பது நல்லது. எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வது சிறப்பு..மதிப்பு, மரியாதை சீராகவே இருக்கும். கணவன்-மனைவி இடையே பொறுமையும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் தேவை.
உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். அரசு வேலையில் இருப்பவர்கள்ஆகஸ்டு 31-ந் தேதிக்கு பிறகு கடந்த காலத்தை போல் பலனை எதிர்ப்பார்க்க முடியாது. வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் கூடும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள்ஆகஸ்டு 31-ந் தேதிக்கு பிறகு பொருள் விரையம் ஏற்படும். சம்பள உயர்வு பதவி உயர்வுக்கு எந்த தடங்கலும் இல்லை. ஆசிரியர்கள் நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு வேலையில் பளு அதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும். அதே நேரம் உழைப்புக்கு தகுந்த வருவாய் கிடைக்கும். தீவிர முயற்சியின் பேரில் கோரிக்கைகள் நிறைவேறும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம்.
வக்கீல்கள் டிசம்பர்26-ந் தேதிக்கு பிறகு தாங்கள் நடத்தும் வழக்குகளில் கவனமாக இருக்கவும். அதே நேரம் உங்கள் உழைப்பு வீணாகாது. இப்போது இல்லாவிட்டாலும் பின்னராவது அதன்பலன்கள் கிடைக்கத்தான் செய்யும்.
வியாபாரம் விஷயமாக வெளியூர் பயணம் சென்று வருவர். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்காது. யாரிடமும் கவனமுடன் பழகவும். நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள். நவம்பர் 13-ந் தேதி வரைஅச்சகம், பத்திரிகை, பப்ளிகேசன், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில் நல்ல வளர்ச்சியை அடையும்.டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு வேலை இன்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் ஆரம்பிக்கலாம். பணத்தை விட அறிவை முதலீடாக போட்டால் நல்ல முன்னேற்றம் காணலாம். அதேநேரம் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்திற்காக அதிக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். சமுக நல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். ஆகஸ்டு 31-ந் தேதிக்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.
மாணவர்கள் நவம்பர் 13-ந் தேதி வரை சிறப்பான பலனை காணலாம். நல்ல மதிப்பெண் பெறலாம். மேற்படிப்பு தொடரும். அதன்பின் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. விவசாயம் புதிய சொத்து முயற்சியின் பேரில் வாங்கலாம். .வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.
உடல்நலம் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகளால் அவதிப் பட்டவர்கள் பூரணகுணம் அடைவர். ஆனால் பயணத்தின் போது சற்று கவனம் தேவை.
பரிகாரம்- ஊனமுற்றவர்களுக்கும், கணவரை இழந்து தவிக்கும் பெண்களுக்கும் இயன்ற உதவியை செய்யுங்கள். கேதுவுக்கு கொள்ளு படைத்து அர்ச்சனை செய்யுங்கள். நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு ஆலுங்குடி, திருச்செந்தூர், திட்டக்குடி., பட்டமங்கலம் போன்ற ஏதாவது ஒரு குருத்தலத்திற்கு சென்று வாருங்கள்.

                   ரிஷபம் 

ரிஷப ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டின் தொடக்தில் பொருளாதார வளம் மேம்படும். தடைகளை எளிதில் முறியடித்து எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் உருவாகும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளும் கிடைக்க பெறுவர். சிலர் புதிய வீடு வாங்குவர். அல்லது வசதியான வீட்டிற்கு குடிபுகலாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் பெறுவர். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு கணவன்-மனைவி ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகையிலும் அவ்வளவு அனுகூலம் காணப்படவில்லை. குருமனவேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதத்தை உருவாக்குவார். பல்வேறு தொல்லைகளை கொடுப்பார். ஆனால் அவரது 7-ம் இடத்துப்பார்வையால் எந்த பிரச்சினையையும் முறியடிக்கும் வல்லமை கிடைக்கும். மேலும் உங்களது ஆற்றல் மேம்படும். துணிச்சல் பிறகும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது.
உத்தியோகம்:சிறப்பான முன்னேற்றம் காணலாம். சம்பள உயர்வு வரும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்க பெறலாம். ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்க பெறுவர். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு வேலைப் பளு அதிகமாகவே இருக்கும். மேல் அதிகாரிகளிடம் சற்று அனுசரித்து போகவும். யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள். சிலருக்கு வேலையில் வெறுப்பு வரும். சிலர் வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணம் தோன்றும். குருவின் பார்வை பக்கபலமாக இருப்பதால் எந்த விபரீத விளைவும் ஏற்பட்டு விடாது.
வியாபாரம்: குருவால் நல்ல லாபத்தை பெறலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு சிற்சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய இருக்கும். பணவிரயம் ஏற்படும். எதிரிகள் வகையில் ஒரு கண் இருப்பது நல்லது.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் தாராளமாக வரும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் நற்பெயரும், புகழும் கிடைக்க பெறுவர்.
மாணவர்கள்: வெற்றி கிடைக்கும். விரும்பிய பாடம் கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு பெறலாம். ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு சற்று முயற்சி எடுத்து படிக்கவும்.
விவசாயம்: கால்நடை வளர்ப்பவர்களும் நல்ல பலனை காணலாம். மஞ்சள் மொச்சை, கடலை, நெல் போன்ற தானியங்கள் நல்ல மகசூலை கொடுக்கும். ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள்: மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவன்மற்றும் குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு சிற்சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அண்டை வீட்டாரிடம் வளவள பேச்சு வேண்டாம். உடல்நலம் வயிறு தொடர்பான சிறுசிறு உபாதைகள் வரலாம்.
செப்டம்பர் மாதம் முதல்
எந்த பிரச்சினை வந்தாலும் அதை குரு மற்றும் சனி பார்வையால் எளிதில் முறியடிப்பீர்கள். பொன், பொருள் கிடைக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர்.செல்வாக்கு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வீடு-மனை வாகனம் வாங்கலாம். உறவினர்கள் பகையை மறந்து ஒன்று சேருவர்.
உத்தியோகத்தில் பின்தங்கிய நிலை மறையும். பல சிறப்பான பலனை காணலாம். வேலையில் பளு குறையும். நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு சம்பள உயர்வு வரும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்க பெறலாம். ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்க பெறுவர்.வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.
வியாபாரம் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் சனிபகவானின் வியாபாரத்தை பெருக்கி கொள்ளலாம். உங்களிடம் வேலைபார்ப்பவர்கள் நன்றிகடனுடன் இருப்பர். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் செய்யலாம். கூலி வேலைகள் செய்பவர்கள் மன நிம்மதியுடன் காணப்படுவர். தரகு,கமிஷன் தொழில் ஆரம்பத்தில் அலைச்சலும், உளைச்சலும் இருந்தாலும் போகபோக வளர்ச்சி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். டிசம்பர் 26-ந் தேதி முதல் தரகு, பழைய பொருட்களை வாங்கி விற்றல் போன்றவற்றிலும் அதிக வருமானம் காணலாம்.
கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்க பெறுவர். எழுத்தாளர்கள் நல்ல புகழை காண வாய்ப்புண்டு. வக்கீல்கள் தொழிலில் சிறந்து விளங்குவர். பொதுநல சேவகர்கள், அரசியல் வாதிகள் ஆகியோர் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்கள் நவம்பர்11-ந் தேதிக்கு பிறகு தேக்க நிலை மாறும். ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். விவசாயிகள் நல்ல வளத்தோடு மனநிம்மதியும் காண்பர்.
பெண்கள் குடும்பத்தில் உங்களால் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். .நவம்பர் 11-ந் தேதிக்கு பிறகு தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. கணவன் மற்றும்குடும்பத்தாரின்அன்பு கிடைக்கும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். விருந்து,விழா என சென்று வருவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அண்டை வீட்டாரிடம்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும். அவர்கள்தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். உடல்நலம் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.
பரிகாரம்: சாப்பிடும் முன்பு காக்கைக்கு அன்னமிடுங்கள். திருநாகேசுவரம்-திருபெரும்பள்ளம் அல்லது காளகஸ்தி ஆகிய தலங்களுக்குச் சென்று வரலாம். ஜூலை 7-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரைவியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபடுங்கள் அப்போது கொண்டை கடலை படைத்து தானம் செய்யவும்.

                    மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே!இந்த சார்வரி ஆண்டின் தொடக்தில் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. முக்கிய காரியங்களை பெரியோர்களின் ஆலோசனையின்பேரில் நிறைவேற்றவும். உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு காரிய அனுகூலம் ஏற்படும். உற்சாகம் பிறக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு,பாசம் மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மதிப்பு, மரியாதை சிறப்படையும்.
உத்தியோகம்: வேலையில் பளு அதிகரிக்கும். ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு வேலையில் ஆர்வம் ஏற்படும். உங்கள் திறமை பளிச்சிடும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் -பெறலாம். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்கு இந்த காலம் உன்னதமாக இருக்கும்.
வியாபாரம்:ஆண்டின்தொடக்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கா- மல் போகலாம். எதிலும் அதிக முதலீடு போடவேண்டாம். சிலர் அரசின் கெடுபிடிக்கு ஆளாகலாம். முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும். ராகுவால்அலைச்சலும் ஏற்படும். எதிரிகள் வகையில் சற்று கவனம் தேவை. ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு லாபம்அதிகரிக்கும்.பண வரவுக்கு பஞ்சம் இருக்காது. அரசுவகையில் அனுகூலம் காணப்படுகிறது. பெண்களை பங்குதாரராக கொண்ட வணிகம் சிறப்படையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.
தொழில்அதிபர்களுக்கு ஆண்டின் தொடக்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போகலாம்.எதிலும் அதிக முதலீடு போடவேண்டாம். சிலர் அரசின் கெடுபிடிக்கு ஆளாகலாம். முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும். எதிரிகள் வகையில் சற்று கவனம் தேவை.தரகு,கமிஷன் தொழில் ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு எதிர்பாராத பணம் கிடைக்கப் பெறலாம்.எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.
கலைஞர்கள்:எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு மகிழ்ச்சியுடன் காணப்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக் -கும்.காரியத்தடை, பொருள்நஷ்டம், அவப்பெயர் முதலியன மறையும். உங்கள் முன்னேற்றத்துக்கு பெண்கள் மிகவும் உறுதுனையாக இருப்பர்.
மாணவர்கள்: முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். குருவின் பார்வை பலமாக இருப்பதால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்காமல் போகாது. ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு சிறப்பான பலனை காணலாம். நற்பெயர் கிடைக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு கிடைக்க பெறலாம்.
விவசாயிகள்:நெல்,மஞ்சள், பழவகைகள் போன்ற வற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். கைத்தொழில் செய்வோர் மனதில் நிம்மதி அடைவர். சேமிப்பு அதிகரிக்கும். கூலி வேலை செய்வோரும் திருப்திகரமாக வாழ்வர்.
பெண்களுக்கு ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். மேலும் பணப்புழக்கம் இருக்கும். அண்டைவீட்டார்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலைவரலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.
உடல் நலனை பொறுத்தவரை சீராக இருக்கும். உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.
செப்டம்பர் மாதம் முதல்
இந்த காலத்தில் கணவன்-மனைவி ஒருவருக் கொருவர் பொறுமையாக – வும், விட்டுகொடுத்தும் போக வேண்டும். சிலரது வீடுகளில் பொருட்கள் திருட்டுபோக வாய்ப்பு உண்டு. மன வேதனையும், நிலையற்ற தன்மைûயும் ஏற்படலாம்.
உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம்.நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். அரசு வேலையில் இருப்பவர்கள் ஆகஸ்டு 31-ந் தேதிக்கு பிறகு விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு தடைகள், திருப்தியின்மை போன்றவை மறையும்.சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதியபதவி தேடிவரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். வக்கீல்கள் நவம்பர் 13-ந் தேதி தாங்கள் நடத்தும் வழக்குகள் சிறப்பாக இருக்கும். சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
வியாபாரம் பொருள் விரயம், பணம்மாயம் போன்ற சம்பவங்கள் இருக்காது. பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். ஆகஸ்டு 31-ந் தேதிக்கு பிறகு உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும்.பத்திரிகை தொழில், தானிய வியாபாரம், தங்கம், மற்றும் உலோக வியாபாரம் சிறப்பாக இருக்கும். பழைய பொருட்களை வாங்கி விற்கும் தொழில் அனுகூலத்தை தரும்.டிசம்பர்26-ந் தேதிக்கு பிறகு பணவிஷயத்தில் யாரையும் நம்பி விட வேண்டாம். புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். சிலருக்கு வெளியூர் பயணம் அனுகூலத்தை கொடுக்காது.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு சாதகமான காற்று வீசும். புதிய பதவி கிடைக்கப் பெறுவர்.மக்களிடையே நற்பெயர் கிடைக்கும். மாணவர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்த நிலையில் இருப்பர். ஆசிரியர்களின் ஆலோனை கிடைக்கும். நவம்பர் 11-ந் தேதிக்கு பிறகு சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.
விவசாயத்தில் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். பசு மற்றும் கால்நடைகள் வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். புதிய சொத்து வாங்கு வதற்கான அனுகூலம் உண்டு. வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள்: திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு ஒருவருக் கொருவர் பொறுமையாகவும், விட்டுகொடுத்தும் போக வேண்டும்.ஆகஸ்டு31-ந் தேதிக்கு பிறகு நகை-ஆபரணங்கள் வாங்கலாம். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும். உடல்நலம் சிலர் மனஉழைச்சலுடன் காணப்படுவர்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு உளுந்து, கொள்ளு தானம் செய்யுங்கள். நவம்பர்11-ந் தேதிக்கு பிறகு ஞானிகளுக்கு காணிக்கை செலுத்துங்கள்.

                  கடகம் 

கடக ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டு சிறப்பானதாக அமையும். தேவைகள் பூர்த்தி ஆகும். ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும்.திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும்.அதுவும் நல்ல வரனாக அமையும். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். சிலருக்கு வீடு கட்டும் யோகம் வரும். புதிய வாகனம் வாங்கலாம். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர்.செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தில் குழப்பமும், பிரச்சினைகளும் வரலாம். உறவினர்கள் வகையில் மனக்கிலேசம் வரலாம். வீண் விவாதங் களை தவிர்க்கவும். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம். குருவின் 9-ம் இடத்துப் பார்வையால் மந்த நிலை மாறும். துணிச்சல் பிறகும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.
உத்தியோகம்: போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.புதியபதவி தேடிவரும்.சகஊழியர்களின் ஒத்துழைப்பும் வந்து சேரும். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு ஆண்டின் தொடக்கம் சிறப்பாக இருக்கும். மேல்அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும்.ஜூலை7-ந் தேதிக்கு பிறகு அதிக வேலைப்பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். சகஊழியர்- களிடம் பகைக்காமல் நடந்து கொள்ளவும். சற்று முயற்சி எடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும்.
வியாபாரம்: அதிக வருமானத்தை காணலாம். புதியவியாபாரம் நல்ல லாபத்தை தரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். இரும்பு வியாபாரம், தரகு போன்ற தொழில் நல்ல வளர்ச்சி அடையும். வேலையின்றி இருப்பவர்கள் சுய தொழிலில் இறங்கலாம். சேமிப்பு அதிகரிக்கும். ராகுவால் வெளியூர் பயணம் ஏற்படும்.
கலைஞர்கள்: பணப்புழக்கம் அதிகரிக்கும். ஒப்பந்தங்கள் தாராளமாக கிடைக்கும்.புகழ், பாராட்டு வரும்.ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு விடா முயற்சியோடு உழைக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த விருது, பாராட்டு போன்றவை கிடைப்பதில் தாமதமாகும். அரசியல்வாதிகள் சமூகநல சேவகர்கள் மேம்பாடு காண்பர். அவர்களுக்கு பதவி கிடைக்கும்.
மாணவர்கள்: ஆண்டின் தொடக்கத்தில் குரு சிறப்பாக இருப்பதால் தேர்வை சிறப்பாக எழுவீர்கள் அதில் வெற்றியும் பெறுவீர்கள். விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயம்: நல்ல வருமானத்தை காணலாம். புதிய சொத்து வாங்கலாம். மஞ்சள், கரும்பு, எள், பனைத்தொழில் மற்றும் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம்.கால்நடை செல்வம் பெருகும்.
பெண்கள்:சிறப்படைவீர்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சகோதரர்களால் உதவி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு அக்கம் பக்கத்தாரிடம் அனாவசிய பேச்சை தவிர்க்கவும். அப்போதுசற்று ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம். உடல்நலம் சிறப்படையும்.
செப்டம்பர் மாதம் முதல்
பெண்களால் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் வசதிகள் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்புபெருகும். உறவினர்கள் வகைகளில் அன்னியோனியம் நிலவும்.தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம்.
உத்தியோகம் சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும்.பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும். ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்கபெறுவர்.படித்துவிட்டு வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.
வியாபாரம் சிறப்படையும். வயதால் மூத்த பெண்கள் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவுவார்கள். அதன் மூலம் வளர்ச்சியை அடையலாம். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.நவம்பர்11-ந் தேதிக்கு பிறகு தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள்அதிக லாபத்தை பெறுவர். கணினித் தொழில்,அச்சுத் தொழில், பத்திரிகை, தரகு, ஆன்மிகம் தொடர்பாக தொழில் போன்றவை சிறப்படையும்.
கலைஞர்கள் வசதியுடன் வாழ்வர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியை பெற முடியாது.
மாணவர்கள் நவம்பர் 11-ந் தேதிக்கு பிறகு சிறப்பைக் காணலாம். கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு பெறலாம்.
விவசாயிகளுக்கு கால்நடை மூலம் பணப்புழக்கம் இருக்கும். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு.வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள் குடும்பத்தோடு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு உறவினர்கள் வகைகளில் அன்னியோனியம் நிலவும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.
உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். குறிப்பாக பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.ஆகஸ்டு 31-ந் தேதிக்கு பிறகு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீடு திரும்புவர்.
பரிகாரம்: பவுர்ணமி நாளில் விளக்கு ஏற்றி சித்திரபுத்திர நாயனாரை வணங்கவும் ஆகஸ்டு31-ந் தேதிக்கு பிறகு கேதுவுக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யலாம்.காளி கோவிலுக்கும் சென்று அர்ச்சனை செய்யுங்கள். டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு சாப்பிடும் முன்பு காக்கைக்கு அன்னமிடுங்கள்.

                     சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே!இந்த சார்வரி ஆண்டு ராகு சாதமாக இருக்கும் நிலையில் பிறக்கிறது. இதனால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும்.பொருளாதாரத்தில் நல்ல வளத்தைத் தருவார். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். புத்தாடை, நகை-ஆபரணங்கள் வாங்கலாம். வாங்கலாம். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.மேலும் ஜூலை7-ந் தேதிக்கு பிறகு தடைகள் அனைத்தும் விலகும். பணப்புழக்கத்துக்கு குறை இருக்காது. மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். உறவினர்கள் வகைகளில் அன்னியோனியம் நிலவும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம்.
உத்தியோகம் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு எதிர்பாராத வகையில் மாற்றம் ஏற்படலாம். வழக்கமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. ஜூலை7-ந் தேதிக்கு பிறகு செல்வாக்கு மேம்படும். சகபெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
அரசு வேலையில் இருப்பவர்கள்ஜூலை 7-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை சிலர் இழந்த பதவியை மீண்டும் கிடைக்க பெறுவர். அல்லது விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கப் பெறலாம். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பர். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர்.
வியாபாரிகள் பெண்களை பங்கு தாரராக கொண்ட தொழில் மிகவளர்ச்சி அடையும். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். பத்திரிகை தொழில், தானிய வியாபாரம், தங்கம், மற்றும் உலோக வியாபாரம் சிறப்பாக இருக்கும். வங்கிகடன் எளிதாக கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிறப்பான வருமானம் இருக்கும்.அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். அரசியல்- வாதிகள், பொதுநல சேவகர்கள் முன்னேற்றம் காணலாம்.
மாணவர்கள் ஆசிரியரின் ஆலோசனையை பெறுவது நன்மை தரும். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு குருவால் சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் ஏற்படும். கெட்ட சகவாசத்திற்கு விடைகொடுப்பர்.
விவசாயிகள் நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல மகசூலைத் தரும். நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வளம் காண்பர். ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு கால்நடை பசுவளர்ப்பு போன்ற வற்றில் வருவாய் கிட்டும் புதிய சொத்து வாங்குவதற்கான காலம் கனிந்து வரும். வழக்கு விவகாரங்கள் சிலருக்கு சாதகமான தீர்ப்பு வந்து கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக் கும்.
பெண்கள் ஆடம்பர செலவை தவிர்க்கவும். ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். பிரிந்திருந்த குடும்பம் நிரந்தரமாக ஒன்று சேரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும்.
செப்டம்பர் மாதம் முதல்
குடும்பத்தில் சீரான வசதி இருக்கும். நவம்பர் 11-ந் தேதிக்கு பிறகு திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைபடலாம். மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும்.எனவே வீண் விவாதங்களை தவிர்க்கவும். அனாவசிய செலவைத் தவிர்க்க வேண்டும்.
உத்தியோகம் கடந்த காலத்தைவிட வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படலாம்.சிலர்வேலையில் அதிக ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் நவம்பர் 11-ந் தேதிக்கு பிறகு குருப்பிரீத்தி செய்தால் சிறப்பான பலனை பெறலாம்.
வக்கீல்கள் டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு. தாங்கள் நடத்தும் வழக்குகள் சிறப்பாக இருக்கும். சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கும். சிலர் தரம்தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால் பண இழப்பை சந்திக்க நேரலாம்.கவனம் தேவை. யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு தொழில் வளர்முகமாக இருக்கும். லாபம் குறையாது. எதிர்பாராத வகையில் பணம் சிடைக்கும். தரகு,கமிஷன் தொழில் தடைகள் அனைத்தும் விலகும். பணப்புழக்கத்துக்கு குறை இருக்காது. மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் முயற்சியின் பேரில் பெறலாம். எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதிபலனைஎதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்கள் நவம்பர் 11-ந் தேதிக்கு பிறகு தீவிர முயற்சி எடுத்தால்தான் முன்னேற்றம் காண்பர். சிலர் தகாதசேர்க்கையால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். எனவே அந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.
விவசாயத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும். டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு வழக்கு விவகாரங்கள் சிலருக்கு சாதகமான தீர்ப்பு வந்து கை விட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள் திருப்திகரமாக வாழலாம். நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு குடும்பத் தேவைக்காக அதிகமாக பாடுபடவேண்டிய திருக்கும். அக்கம் பக்கத்தினர் வகையில் தொல்லைகள் இடர்பாடுகள் வரலாம்.சற்று ஒதுங்கி இருக்கவும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். ஆகஸ்டு 31-ந் தேதிக்கு பிறகு கேதுவால் சிற்சில உபாதைகள் வரலாம்.
பரிகாரம்: கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யலாம். துர்க்கைக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றுங்கள். பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். நவம்பர்11-ந் தேதிக்கு பிறகு வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். அப்போது கொண்டை கடலை படைத்து தானம் செய்யவும்.

                      கன்னி 

கன்னி ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டின் தொடக்தில் குருபகவான் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். ஜூலை7-ந் தேதி முதல்நவம்பர் 13-ந் தேதிவரை அவரால் நற்பலனை கொடுக்க முடியாது.அவர் மன- உளச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார். அவர் 14-11-2020 அன்று முழுபெயர்ச்சி அடைந்து 5-ம் இடமான மகரராசிக்கு மாறுகிறார்.அப்போது அவரால் நமைகள் கிடைக்கும். மேலும் குருவின் 5 மற்றும் 7-ம் இடத்துப்பார்வைகள் சிறப்பாக உள்ளது. இதனால் இந்த காலத்தில் நல்ல பலனை பெறலாம்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய வீடு வாங்கலாம். அல்லது தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபோகலாம். வண்டி வாகனங்கள் வாங்கலாம். வீட்டில் ஒற்றுமை ஏற்படும். உறவினர்கள் உங்களை நாடி வருவர். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு அலைச்சல் இருக்கும். கணவன்- மனைவி இடையே அன்னி யோன்யமான சூழ்நிலை இருக்காது. குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகள் தலை தூக்கலாம். மதிப்பு மரியாதை சுமாராக இருக்கும்.
உத்தியோகம்: ஆண்டின் தொடக்கத்தில் சாதகமான காற்று வீசும். கோரிக்கைகள் நிறைவேறும். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். விருப்பமான இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு வேலைப்பளு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போகலாம். உங்கள் பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம்.
வியாபாரம்: வருமானம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் லாபத்தை தரும்.தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள். புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம்.
கலைஞர்கள்: வசதியுடன் வாழ்வர் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ், பாராட்டு வரும். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு எதிலும் விடாமுயற்சி வேண்டும். எதிர்பார்த்த மதிப்பு பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். உங்கள் திறமை எடுபடாமல் போகலாம். அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர்.
மாணவர்கள்: வெற்றி கிட்டும். மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டும்.
விவசாயம்: நல்ல வளத்தை காணலாம். அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம்.ஜூலை 7-ந் தேதி வரை நெல், சோளம், மஞ்சள் போன்ற வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும்.
பெண்கள்: குதூகலமான பலனை காண்பர். கணவரின் அன்பு கிடைக்கும், உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பானவளர்ச்சியை காண்பீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு ஜூலை7-ந் தேதிக்கு பிறகு வீண் செலவு ஏற்படலாம். கவனமாக இருப்பது புத்திசாலித்தனம். உடல்நலம் வயிறு பிரச்சினைவரும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.
செப்டம்பர் மாதம் முதல்
கடவுனிள் கருணை உங்களுக்கு கிடைக்கும்.மனதில் இருந்த உளைச்சல் அடியோடு நீங்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் கடந்த காலத்தைவிட மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள் கணவன்-மனைவி இடையே அன்பு, பாசம் இருக்கும்.
உத்தியோகம். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். புதிய பதவி கிடைக்கும். தனியார்துறையில் பார்ப்பவர் -களுக்கு வேலைப்பளு குறையும். பதவிஉயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு புதிய வியாபாரம் ஓரளவு அனு கூலத்தை கொடுக்கும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும்பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். பகைவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவீர்கள். அரசியல்வாதிகள், பொதுநல தொண்டர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள்: நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு கல்வியில் நல்ல வளத்தை காண லாம்.ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். வெற்றி கிட்டும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்பை பெறுவர்.
விவசாயம்: மஞ்சள், சோளம், கேழ்வரகு, தக்காளி போன்ற பயிர்கள் மூலம் அதிக லாபத்தை காண்பர். புதிய சொத்து வாங்கும் வண்ணம் கைகூடும். நவீனஇயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. ஆகஸ்டு 31-ந் தேதிக்கு பிறகு ஆடு,கோழி வகையில் எதிர்பார்த்த பலனை பெறலாம். வழக்குவிவகாரங்கள் சாதகமாக இருக்கும். தீர்ப்பு உங்கள் பக்கம் அமையலாம்.
பெண்கள் குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்குசென்று வருவீர்கள். பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
டிசம்பர்26-ந் தேதிக்கு பிறகு மூணளூநூõசிகி 7&‹ ளுரூˆஹிŠளூசி˜ரிõனூசி™ ழூகிரிறூ வூடீõசி˜. ளுவூகி ஹீô‹ ழுù‰வூறூனூறூசிநூ õசி›ரிõˆ வூடீõசி˜. மிளூசிகி&மிளூசிடீœ அரிரூ‚ளி‹. றூஅ›„இ வுஊநூஓ‚ளி‹.
உடல்நலம் ஆகஸ்டு 31-ந் தேதிக்கு பிறகு உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் பூரண குணம் அடையும்.
பரிகாரம்- சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள்.பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ராகுவுக்கு உளுந்து படைத்து மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். பத்திரகாளியம்மனுக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி பூஜை செய்யவும்.

                    துலாம்

துலாம் ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டின் தொடக்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும். செல்வாக்குஅதிகரிக்கும். ஆன்மிக ஆன்றேகளின் ஆசியும், அருளும் கிடைக்கும். உறவினர்கள் வகையில் வீண் விரோதம் உருவாக வாய்ப்பு உண்டு. எனவே சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு குருவின் பார்வையால் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு-மனை வாங்கலாம்.திருட்டுபயம் மறையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.
உத்தியோகம்: பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். தனியார் துறையில் இருப்பவர்கள் அதிக பளுவை சுமக்கவேண்டியது இருக்கும். மேல் அதிகரரிகளுடன் அனுசரித்து போகவும்.உங்கள் பொறுப்புகளை வேறு யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு வேலைமீது வெறுப்பு வரலாம். ஆனால் ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு குருவின் பார்வையால் உயர்வை தருவார். வக்கீல்களுக்கு தாங்கள் நடத்தும் வழக்குகள் சிறப்பாக இருக்கும்.
வியாபாரம்: தொழில் நல்ல வளர்ச்சி அடையும். வீண்அலைச்சல் இருக்காது. சென்ற இடமெல்லாம் வெற்றி ஏற்படும். சேமிப்பு அதிகரிக்கும். நல்ல வருமானத்தை காண்பர். புதிய தொழில் தொடங்கலாம். பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.அரசிடம் இருந்து உதவி கிடைக்கும்.கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும். ஜூலை 7-ந் தேதிக்குபிறகு .எதிரிகளின் சதியை உங்களது சாமர்த்தியத்தால் முறியடிப்பீர்கள்.
கலைஞர்கள்: சிரத்தை எடுத்தே புதிய ஒப்பந்தங்களை பெறவேண்டிய- திருக்கும். அரசியலில் சிறப்பான பலனைக் காண்பர். புகழ், பாராட்டு போன்றவை வரும். நல்ல பணப்புழக்கமும் இருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம். மாணவர்கள்:சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு குருவின் பார்வையால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. விவசாயம்: வளர்ச்சி காணலாம். நெல், கோதுமை, கேழ்வரகு, சோளம்,எள் மற்றும் பனை பயிர்கள் நல்ல வருமானத்தை தரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். தீர்ப்பு உங்கள் பக்கம் அமையலாம்.
பெண்கள்:குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். குதூகலமான பலனை காண்பர். கணவரின் அன்பு கிடைக்கும். உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும்.சிலருக்கு பிறந்த வீட்டில் இருந்து பொன், பொருள் வரலாம். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. பெண்காவலர்களுக்கு .புதிய பதவி தேடி வரும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். உடல் நலம்: தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை.
செப்டம்பர் மாதம் முதல்
வீட்டினுள்சிற்சில பிரச்சினை வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். கவனம் தேவை. ஆனால் நவம்பர் 11-ந் தேதி வரை குருவின் பார்வையால் நற்பலனை தருவார். இதனால் பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார்.
உத்தியோகம் குருவின் பார்வையால் உயர்வை தருவார். மேல் அதிகாரி -களின்ஆதரவு கிடைக்கும். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். ஆனால் அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும்.நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள்சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.
வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்சினை களை சந்திக்க நேரிடலாம்.எனவே உங்கள் வரவு-செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும். வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்து அவர்கள் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளவும்.
கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு வந்து சேரும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். மாணவர்கள் சிரத்தை எடுத்துபடித்தால்தான் பலன் கிடைக்கும். விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டும்.வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.
பெண்கள் பொதுவாக எந்த பிரச்சினையிலும் விட்டுக்கொடுத்து போகவும். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்துவேறுபாடும் ஏற்படும்.சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும்.தாயைபிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். உடல் நலம் சிறுசிறு உபாதைகள் வரலாம்.
பரிகாரம்- பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று வாருங்கள். ராகு காலத்தில் பைரவருக்கு தயிர் சாதம் படைத்து வழிபடலாம். வியாழக்கிழமை குருபகவானுக்கு கொண்டை கடலை படைத்து வழிபாடு செய்யலாம். ஏழைகள் படிக்க உதவி செய்யவும். டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

                    விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே!இந்த ஆண்டின் தொடக்தில் எந்த ஒரு முக்கிய காரியத்தையும் தீர சிந்தித்த பிறகே தொடங்க வேண்டும் தம்பதியினர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். சற்று கவனமாக இருக்க வேண்டும்.ஜூலை7-ந் தேதிக்கு பிறகுகணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும்.ஆடம்பர பொருட்களை வாங்கலாம்.புதிய வீடு மனை வாங்கலாம். சிலர் வசதியான வீட்டிற்கு குடிபோகும் வாய்ப்பு கிட்டும்.வீட்டில் மங்களகரமான சூழ்நிலை உருவாகும். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர். உறவினர்கள்மத்தியில் நல்ல செல்வாக்கு இருக்கும். அவர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்தேறும். அதுவும் நல்ல வரனாக அமையும்.
உத்தியோகம்:வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.ஜூலை7-ந் தேதிக்கு பிறகு குருவால் நல்லமுன்னேற்றம்காணலாம். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்றவை கிடைக்கும். உங்களை எதிர்த்தவர்கள் உங்கள் நிலைமையை புரிந்து அனுசரணையுடன் நடப்பர்.
வியாபாரம்: அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் வரவு-செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். புதிய வியாபாரம் தற்போது தொடங்க வேண்டாம்.அப்படியே தொடங்கினாலும் உங்கள் அறிவை பயன்படுத்தி முதல் போடாமல் முன்னேற வழிவகை காணுங்கள்.அதுவும் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் பெயரில் தொடங்கவும். ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு குருவால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். கம்ப்யூட்டர், அச்சுத் தொழில் போன்றவை நல்ல வளர்ச்சி அடையும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்..
கலைஞர்கள்:சுமாரான நிலையில் இருப்பர். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சமூகத்தில் ஒரு அந்தஸ்க்கு உயர்த்தப்படுவர். சமூகநல சேவகர்கள், அரசியல்வாதிகள் நல்ல வசதியுடன் காணப்படுவர்.
மாணவர்கள்: ஜூலை 7-ந் தேதி வரை சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.விரும்பிய பாடம் கிடைக்க தீவிரமுயற்சி எடுக்க வேண்டிய திருக்கும். அதன்பிறகு குருவால் ஆசிரியர்களின் அறிவுரை பயன் உள்ளதாக இருக்கும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவர்.
விவசாயம் சீராக நடக்கும். உழைப்புக்கு தகுந்த வருவாய் கிடைக்கும்.வழக்கு,விவகாரங்கள் சுமாராக இருக்கும்.
பெண்கள்:கணவரிடம் விட்டுக் கொடுத்து போகவும். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
ஆண்டின் பிற்பகுதி
குரு பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார்.நவம்பர்11-ந் தேதிக்கு பிறகு குரு உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். மனதில் வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும் சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகள் கிடைக்கும். புதிய வீடு-மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும். திருட்டு களவு பயம் நீங்கும்.
உத்தியோகம் மேல் அதிகாரிகளின் ஆதரவும் அனுசரணையும் வந்து சேரும்.தங்கள் கோரிக்கைகளை நவம்பர் 11-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.அதன்பிறகு அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் வக்கீல்கள் டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும். தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். கவனம் தேவை. டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எந்த தொழிலும் முன்னேற்ற பாதையில் செல்லும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். சனிபகவான் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடைய செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் சிறந்தோங்க செய்வார்.
கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு வந்து சேரும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். சிலர் தரம்தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால் பண இழப்பை சந்திக்க நேரலாம். கவனம் தேவை. மாணவர்கள் சிரத்தை எடுத்து படித்தால்தான் பலன் கிடைக்கும். விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டும். டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.
பெண்கள் நவம்பர்11-ந் தேதிக்கு பிறகு வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக்கொடுத்து போவது நல்லது.
உடல் நலம் ஆகஸ்டு 31-ந் தேதிக்கு பிறகு உடல் நலத்தில் சிறிது அக்கறை காட்டவேண்டியது இருக்கும்.
பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.நாக தேவதையை வணங்கி வாருங்கள். கணவரை இழந்த மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். கேதுவுக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யலாம்.

                தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டின் தொடக்தில் குடும்பம்: குடும்ப நிலைமை மேம்படும். மகிழ்ச்சி நிலவும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன்- மனைவி இடையே உள்ள பிரச்சினை மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு தம்பதிகளிடையே அவ்வப்போது கருத்துவேறுபாடு வரலாம். அனுசரித்து போவது நல்லது.உறவினர்கள் மத்தியில் அவ்வப்போது சிற்சில மனக்கசப்புகள் வரலாம். சற்று விலகி இருக்கவும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் முன்புபோல் எளிதில் கைகூடாது.
உத்தியோகம்: செல்வாக்கு அதிகரிக்கும்.கோரிக்கைகள் நிறைவேறும். சம்பளஉயர்வு,பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். தனியார் துறையில் இருப்பவர்களுக்கு சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு வேலையில் அலைச்சல் இருக்கும். சிலர் பொறுப்புகளை இழக்க நேரிடலாம். கவனம் தேவை. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தைவிட்டு தற்காலிகமாக பிரியவேண்டிய திருக்கும்.நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
வியாபாரம்: சீராக நடைபெறும். உழைப்புக்கு தகுந்த லாபம் இருக்கும். வெளியூர்பயணம் சிறப்பை தரும்.அச்சகம், பத்திரிகை, பப்ளிகேசன், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில் நல்ல வளர்ச்சியை அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும்.ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு பகைவர்களின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கினாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள்.சிலரிடம் வீண் விரோதம் வர வாய்ப்பு உண்டு.எனவேயாரிடமும் எச்சரிக்கையுடன் பேசவும்.புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும்.
கலைஞர்கள்:புகழ் பாராட்டு கிடைக்கும். ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதி பலனை எதிர்பராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்கள்: ஜூலை 7-ந் தேதி வரை கல்வியில் சிறந்த நிலையில் இருப்பர். ஆசிரியர்களின் ஆலோசனையும் கிடைக்க பெறுவீர்கள்.
விவசாயிகள் சீரான மகசூலை காண்பர். வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும்.
பெண்கள்:தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுயதொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர். ஜூலை 7-ந் தேதிக்கு பிறகுகணவரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உறவினர்கள் வகையில் வீண் மனக்கசப்பு வரலாம். வெளியூர் வாசம் இருக்கும். உடல்நலம் சிறுசிறு வயிறு பிரச்சினை வரலாம்.
செப்டம்பர் மாதம் முதல்
ராகு முயற்சிகளில் வெற்றியை தருவார். உங்கள் ஆற்றல் மேம்படும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். நன்மைகள் அதிகரிக்கும். பணப்புழக்கம் சிறப்படையும். பொருளாதாரத்தில் ஒருபடி மேலோங்கலாம். தடைகள் அனைத்தும் விலகும். இதனால் ஆனந்தமும் நிலைக்கும். வாகன சுகம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலையில் எந்தவித தொய்வும் இருக்காது. நவம்பர்11-ந் தேதிக்கு பிறகு வேலைப்பளு, வீண் மனக்கவலை மறையும். உங்கள் திறமை பளிச்சிடும்.
வியாபாரிகள் எதிரிகளின் இடையூறுகளில் இருந்து விடுபடுவீர்கள். தடையின்றி முன்னேறலாம். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டுவந்தர்கள் அவர்கள்பிடியில்இருந்து விடுபடுவர்.இதனால் வீண்விரையம் தடைபடும். நவம்பர்11-ந் தேதிக்கு பிறகு தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
தரகு,கமிஷன் தொழில் ஆகஸ்டு 31-ந் தேதிக்கு பிறகு எதிரிகளின் இடையூறுகளில் இருந்து விடுபடுவீர்கள். தடையின்றி முன்னேறலாம்.
கலைஞர்களுக்கு வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும்.நவம்பர்11-ந் தேதிக்கு பிறகு கெட்ட சகவாசத்திற்கு விடைகொடுப்பர். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயிகள் மஞ்சள், கொண்டைக்கடலை, உளுந்து மற்றும் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர்.நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.
பெண்கள் முன்னேற்றம் அடைவர். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு காண்பர்.
உடல்நலம் கேதுவால் பித்தம், மயக்கம் போன்ற சிற்சில உபாதைள் வரலாம்.
பரிகாரம்: பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இல்லாததால் சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை வலம் வரவும்.சனிபகவானுக்கு எள்சோறு படைத்து வணங்கலாம்.விநாயகரையும், ஆஞ்சநேயûயும் வழிபட்டு வாருங்கள். கேதுவுக்கு அர்ச்சனை செய்து வாருங்கள். கணவரை இழந்த மூதாட்டிகளுக்கும், சன்னியாசிகளுக்கும் இயன்ற உதவிகளை செய்யுங்கள்.

                     மகரம்

மகரராசி அன்பர்களே!இந்த சார்வரி ஆண்டின் முற்பகுதியில் ராகுவும் பிற்பகுதியில் கேதுவும் சாதமாக இருந்து நற்பலனை தருவார்கள்.
ராகு முயற்சிகளில் வெற்றியை தருவார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். குருவின் பார்வையால் சகோதரிகளால் பொருள் சேரும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்ய மான சூழ்நிலை இருக்கும். வீட்டில் குதூகலமான பலன்களை காணலாம். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு வீண் விவாதங்களை தவிர்க்கவும். மனக்குழப்பம் ஏற்படலாம். உறவினர்கள் வகையில் பிணக்குகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை வெளியூர்மாற்ற வேண்டிது இருக்கும்.
உத்தியோகம்: திருப்திகரமான நிலை இருக்கும். பல்வேறு அனுகூலங் -களை பெறலாம். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு வேலைப்பளுவும், அலைச்சலும் இருக்கும். வேலையில் சற்று பின்தங்கிய நிலை ஏற்படலாம்.
வியாபாரம்: வெளியூர் பயணம் சாதக பலனை கொடுக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். தரகு, அதிகாரம்-ஆதாரம் இல்லாத தொழில் சிறப்பாக நடக்கும்.தொழில் அதிபர்கள் அரசின் சோதனைக்கு ஆளாகலாம். எதிரிகள் வகையில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு எதையும் சிரத்தை எடுத்தே முடிக்க வேண்டியதிருக்கும். அரசியல் வாதிகள், சமூகநல சேககர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்கள்: கல்வியில் சிறப்பு அடைவீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம். ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.
விவசாயிகள்: நல்ல வருவாயோடு காணப்படுவர். மகசூல் அதிகரிக்கும். குறிப்பாக நெல், கோதுமை, கேழ்வரகு மற்றும் பயறுவகைகளில் நல்ல லாபம் கிடைக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த லாபம் வரும்.
பெண்கள்: மகிழ்ச்சியுடன் காணப்படுவர். உங்களால் குடும்பம் சிறப்பு அடையும்.பொன், பொருள் கிடைக்கும். சகோதரர்கள் மிக உறுதுணையாக இருப்பர். மேலும் குருபகவானின் பார்வை மூலம் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்திவைப்பார். ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு சிற்சில விஷயங்களில் பொறுமையாகவும், விட்டுகொடுத்து போகவும். தனியார் துறையில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டும். அரசு ஊழியர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.
உடல்நலம் சிறப்பாக இருக்கும். சிலர் வீண் மன உளைச்சலில் இருப்பர்.
செப்டம்பர் மாதம் முதல்
எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். இதனால் துணிச்சல் பிறகும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும்.உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்பண வரவு கூடும். வீடு, மனை வாங்கும் யோகம் கூடி வரும். புத்தாடை அணிகலன்கள் கிடைக்கும்.
உத்தியோகம் பெண்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கப்பெறலாம். சிலர் பக்கத் தொழில் செய்து வருவாயை அதிகரிக்க செய்வர்.பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.
வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். இடையூறை முறியடிப்பீர்கள். வியாபாரம் விஷயமாக வெளியூர் பயணம் சென்று வருவர்.பெண்கள் வகையில் அனுகூலம் கிட்டும். மனைவி பெயரில் உள்ள தொழில் சிறப்படையும்.
கலைஞர்கள் பெண்கள் மூலம் உயர்ந்த அந்தஸ்தை பெறலாம். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்- பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்கள்: சிறந்த நிலையில் இருப்பர். விவசாயம் பயறு வகைகளில் நல்ல வருமானம் இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். கைதொழில் செய்பவர்கள் மனநிம்மதியுடன் காணப்படுவர். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பொருட்கள், சொத்துகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடிவரும்.
உடல்நலம் மயக்கம் போன்ற உபாதை களால் அவதிப்பட்டவர்கள் பூரண குணம் அடைவர். நீண்ட காலமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்புவர்.
பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள். அப்போது கொண்டைக்கடலை தானம் செய்யலாம். ஏழைகள் படிக்க உதவி செய்யவும். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள்.

                        கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டு சனிபகவான், கேது சாதமாக இருக்கும் நிலையில் பிறக்கிறது. அவர்கள்காரிய அனுகூலத்தைக் கொடுப்பார்கள். பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம். உங்களுக்கு இது மிகவும் சிறப்பான காலம்.
எந்த தடைகளையும் முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். செல்வாக்கு கூடும். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு குடும்பம் மேன்மை அடையும். தேவைகள் பூர்த்தியாகும். குதூகலமும் அதிகரிக்கும். கணவன்-மனûவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். புதிய வீடு கட்டலாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும். புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். உறவினர்கள் வகையில் இருந்துவந்த பிணக்குகள் மறையும்.
உத்தியோகம்: பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு ஜூலை7-ந் தேதிக்கு பிறகு பின்தங்கிய நிலை மறையும். பல சிறப்பான பலனை காணலாம். வேலையில் பளு குறையும். சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வீண் அலைச்சல் இருக்காது. வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவர். வக்கீல்கள் தாங்கள் நடத்தும் வழக்குகள் சிறப்பாக இருக்கும். சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
வியாபாரம்: லாபம் அதிகரிக்கும்.தடையின்றி முன்னேறலாம். வீண்விரையம் தடைபடும். புதிய தொழில் அனுகூலம் ஏற்படும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். பகைவர்களின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கினாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். வணிகம் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் வீடு திரும்புவர். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
கலைஞர்கள்: ஜூலை7-ந் தேதிக்கு பிறகு புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவர். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும்.
மாணவர்கள்: பிற்போக்கான நிலை இருக்காது. கெட்ட மாணவர்களின் சகவாசத்தினால் அலைக்கழிந்தவர்கள் ஜூலை7-ந் தேதிக்கு பிறகு நல்ல புத்தியோடு சிறப்பான நிலைக்கு செல்வர்.சிறப்பான பலனை காணலாம். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறலாம்.
விவசாயம்: திருப்திகரமான வருவாயை காணலாம்.சிலர் புதிய சொத்து வாங்குவர்.பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். தீர்ப்பு உங்கள் பக்கம் அமையலாம். ஜூலை7-ந் தேதிக்கு பிறகுகால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும்.
பெண்கள்:குடும்ப மேம்பாட்டுக்காக கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.ஜூலை7-ந் தேதிக்கு பிறகுமனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும்.தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. தோழிகள் உதவிகரமாக இருப்பர். உடல் உபாதைகள் பூரண குணம் அடையும்.
செப்டம்பர் மாதம் முதல்
மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. பொருள் சேரும். நவம்பர் 14-ந் தேதி வரை முன்னேற்றமான சம்பவங்கள் நடக்கும். பொருள் சேரும். கணவன்- மனைவி இடையே அன்பு இருக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். அதன்பிறகு. குழப்பம் நிலவும். மனக் கவலை ஏற்படும். கணவன்- மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.
உத்தியோகம் தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை நவம்பர் 13-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். அதன்பிறகு வேலைப்பளு இருக்கும். வேலையில் கவனம் தேவை. சிலருக்கு இட மாற்றம் ஏற்படும். அரசு வேலையில் இருப்பவர்கள் அதிக அக்கறையுடன் இருக்கவும்.
போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான பலன்களை எதிர்நோக்கலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.சக ஊழியர்- களின் ஒத்துழைப்பும் வந்து சேரும்..அவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.
வியாபாரிகளுக்கு லாபம் குறையாது. டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு லாபம் கிடைக்க அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டிய- திருக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது. மாணவர்களுக்கு நவம்பர்14-ந் தேதிக்கு பிறகு மனதில் தளர்ச்சி ஏற்படும்.
விவசாயிகளுக்கு ஓரளவு மகசூல் கிடைக்கும். கோழி,ஆடு வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை பெறலாம். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும். வழக்கு,விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தில் உங்களின் அனுகுமுறை கண்டிப்பாக தேவைபடும். வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.
உடல்நலம் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
பரிகாரம்: பத்திரகாளி அம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சை பழ விளக்கு ஏற்றுங்கள். பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று பால் ஊற்றுங்கள். ஏழைகளுக்கு உளுந்து தானம் செய்யுங்கள். டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு விநாயகரை வணங்கி வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கும், கணவரை இழந்து தவிக்கும் பெண்களுக்கும் இயன்ற உதவியை செய்யுங்கள்.

                      மீனம்

மீனராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டின் தொடக்தில் பொருளாதார வளம் சீராக இருக்கும். எடுத்த காரியங்கள் தங்குதடையின்றி நிறைவேறும். பணப் புழக்கம் சற்று அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை கூடும்.திருமணம்போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். புதியவீடு கட்டலாம். ஆனால் அதற்காக கடன் வாங்க வேண்டியதிக்கும். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும்.வீண்-விவாதங்களை தவிர்க்கவும்.
உத்தியோகம்: உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். சீரான முனனேற்றம் காணலாம். சம்பள உயர்வு வழக்கம் போல் இருக்கும்.ஜூலை7-ந் தேதிக்கு பிறகு வேலைப்பளு அதிகரிக்கும். சிலர் எதிர்பாராத வகையில் இடமாற்றம் காண்பர். முதலில் அது பிடிக்காததாக இருந்தாலும் போகப்போக அது உகந்ததாக அமையும். நிலையற்ற தன்மை ஏற்படும். வேலை நிமித்தமாக சிலருக்கு குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரியும் நிலையும் உருவாகலாம்.
வியாபாரம்: செலவும் அதிகரிக்கும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். வியாபாரம் விஷயமாக வெளியூர் பயணம் சென்று வருவர். யாரிடமும் கவனமுடன் பழகவும். எதிலும் பணத்தை முதலீடு செய்வதைவிட அறிவை பயன்படுத்தி வருவாயை தேடவேண்டும். சிலர் தொழில் நிமித்தமாக இருப்பிடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியது வரலாம்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் பெறலாம். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். உங்களுக்கு வரவேண்டிய விருது போன்றவை தட்டிபறிக்கப்படலாம். அதே நேரம் பணவிஷத்தில் எந்த பின்னடைவும் இருக்காது. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர்.
மாணவர்கள்:முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும். நல்ல தேர்ச்சி இருக்கும். விரும்பிய பாடத்தை பெறலாம். போட்டிகளில் வெற்றி காண- லாம். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் ஏற்படும். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும் ஆசிரியர்களின் அறிவுரை உகந்ததாக இருக்கும்.
விவசாயம்: சீராக நடக்கும். புதிய சொத்து வாங்கலாம். கால்நடை பசுவளர்ப்பு போன்றவற்றில் வருவாய் கிட்டும்.
பெண்கள்: பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும். குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வர். கணவரின் அன்பு கிடைக்கும். ஜூலை7-ந் தேதிக்கு பிறகு சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்ப நன்மைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியது இருக்கும்.
உடல் உபாதைகள் பூரண குணம் அடையும்.
செப்டம்பர் மாதம் முதல்
தேவைகள் பூர்த்தியாகும்.வீட்டில் மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது. நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும்.திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். புதிய வீடு-மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.திருட்டு களவு பயம் நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். டிசம்பர்26-ந் தேதிக்கு பிறகு பணப்புழக்கம் அதிகரிக்கும். புத்தாடை அணிகலன்கள் வாங்காலாம்.
உத்தியோகம்: வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு மேல்அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக- ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள்ஆகஸ்ட் 31-ந் தேதிக்கு பிறகு எதிர்பாராத நற்பலன் கிட்டும். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். வக்கீல்களுக்கு டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு பகைவர்களின் தொல்லைகள் குறையும்.நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு தங்கம், வெள்ளி,வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும். அதன்பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.
கலைஞர்களுக்கு சக கலைஞர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர் அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி, பொறுப்புகளை பெறலாம். நல்ல வசதியுடன் இருப்பர்.
மாணவர்களுக்கு கல்வி வளம் பெருகும். நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு குருவால் ஆசிரியர்கள் ஆலோசனை கிடைக்கும் மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர்வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்க பெறுவர்.
விவசாயிகளுக்கு பாசிபயறு,நெல்,எள்,உளுந்து, கொள்ளு, துவரை, சோளம், மஞ்சள், கொண்டைக் கடலை நல்ல வருவாயை கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும். ஆகஸ்ட் 31-ந் தேதிக்கு பிறகு நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வளம் காண்பர். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும்.
பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு குருவேலைக்கு செல்லும் பெண்களுக்கு உயர்வை தருவார். சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.ஆகஸ்டு 31-ந் தேதிக்கு பிறகு நகை-ஆபரணங்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வந்து சேரும். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். தோழிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.
பரிகாரம்- நவக்கிரகங்களில் கேதுவுக்கு பிரத்யேக அர்ச்சனை செய்யலாம். மேலும் துர்க்கை வழிபாடு உங்கள் முன்னேற்றத்துக்கு துணை நிற்கும்.ஏழைகளுக்கு உளுந்து, கொள்ளு தானம் செய்யுங்கள். டிசம்பர்26-ந் தேதிவரைசனிக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.