பசித்தீர்ப்பவர்களை விமர்சிக்காதீர்கள்

மாத இதழ்கள்

பசித்தீர்ப்பவர்களை விமர்சிக்காதீர்கள்

கர்ணன் இறந்த பின்பு சொர்கத்தில் பசியோடு அலைந்தாராம் ஆனால் அவர் பசி அடங்கவே இல்லை அப்போது இறைவனிடம் கேட்கிறான்.

கர்ணன்: இறைவா நான் பல தான தர்மங்களை செய்தேன் ஆனால் இன்று என் பசியை தீர்க்க முடியவில்லையே ஏன்?

இறைவன்: கர்ணா நீ பல தான தர்மங்களை செய்தாலும் எவருக்குமே நீ அன்னதானம் வழங்கவில்லை அதாவது உணவளிக்கவில்லை ஆகையால்தான் உன் பசி தீர்க்க எவருமில்லை.

ஆனால் உன் ஆள் காட்டிவிரலை வாயில் வைத்துக்கொள் பசி தீரும் என்றாராம்.

( கர்ணன் பசியும் தீர்ந்தது)

கர்ணன் : தற்போது எவ்வாறு பசி தீர்ந்தது இறைவா?

இறைவன்: ஒருமுறை பசியால் வந்த அந்தனருக்கு நீ உனது விரலால் அன்னதானம் அளிக்கும் இடத்தை காட்டினாய் அதனால் தான் உன் விரலால் உன் பசி தீர்ந்தது…

நண்பர்களே தற்போதைய நிலையில் உணவளிப்பவர்கள் நல்லவர்களோ கெட்டவர்களோ புகைப்படம் போடுகிறார்களோ இல்லையோ ஆனால் யாரென்று தெரியாத ஒரு மனிதனின் பசியை இன்று பல பேர் தீர்க்கின்றார்கள் அவர்களை விமர்சிக்காதீர்கள் … கர்ணனை விட மோசமான தண்டனை உங்களுக்கு வரலாம்…..

உயர்வுக்கான எட்டு பாதைகள்.

நேர்மையான நோக்கு.
நேர்மையான குறிக்கோள்.
நேர்மையான பேச்சு.
நேர்மையான செயல்
நேர்மையான வாழ்க்கை முறை.
நேர்மையான முயற்சி.
நேர்மையான மனநிலை.
நேர்மையான தியானம்.

முரண்பாடுகள்

முரண்பாடுகள் நிறைந்தது தானே வாழ்க்கை
என்று சலிப்புரும் மனங்களுக்கு
இதோ சில முரண்பாடுகளும், முறைபாடுகளும்….
அந்த முரண்பாடுகளில் முறைப்பாடுளை கண்டுபிடித்து
வெற்றி காண்பதே நமது வேலையாக இருக்கட்டும்.
அப்படிப்பட்ட முரண்பாடுகளில் சில…
பல்லிருக்கும் சீப்புகள் கடிப்பதில்லை
ஆனால்
பல்லில்லாத செருப்புகள் கடிக்கின்றன.
காலிருக்கும் கட்டில்கள் ஓடுவதில்லை.
ஆனால்
காலில்லாத கடிகாரங்கள் ஓடுகின்றன.
கை இருக்கும் நாற்காலிகள் கட்டுவதில்லை.
ஆனால்
கை இல்லாத கயிறுகள் கட்டுகின்றன.
கொம்பிருக்கும் எழுத்துக்கள் முட்டுவதில்லை
ஆனால்
கொம்பில்லாத நிலைப் படிகள் முட்டுகின்றனவே படி இருக்கும் ஏணிகள் ஏறுவதில்லை
ஆனால்
படி இல்லாத விலைவாசிகள் ஏற்கின்றனவே சரி இவையெல்லாம் மாற்ற முடியுமா……???
முடியாதே……..!!!
மாற்றவே முடியாத போது ஏற்பது தானே சிறப்பு
ஏற்க முடியாவிட்டால் குறை கூறுவதையாவது குறைத்து கொள்ளலாமே.

“சிந்தித்தே தெளிவோம்”