பங்குனி உத்திரம் சிறப்புகள்

செய்தி


பங்குனி உத்திரம் இந்த ஆண்டு 6-4-2020(திங்கட்கிழமை) அன்று வருகிறது. பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் வருகிற நாள்தான் பங்குனி உத்திரம். பொதுவாக இது பவுர்ணமியையட்டியே வரும்.
இந்த நாளில் பல கோயில்களில் திருக்கல்யாணம் நடைபெறும். குறிப்பாக சிவன்-பார்வதி, முருகன்-வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு – லட்சுமி ஆகியோரின் திருக்கல்யாணம் நடைபெறும். மகாலட்சுமியின் அதாவரம் நாள் உத்தரம் என்று கூறப்படுகிறது. அவர் அவதரித்ததே மகாவிஷ்ணுவை மணக்கவே. எனவே அன்றைய தினம்விரதம் இருந்து இறைவனை வணங்கினால் திருமணம் கைகூடும்.
அன்றை தினம் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருக்கும், ரங்கநாச்சியாரு &க்கும் சேர்த்தி உற்சவம் நடைபெறும். இந்த உற்சவத்தை காண்பவர்களுக்கு செல்வ செழிப்பு உண்டாகும். கணவன்-மனைவி ஒற்றுமையாக வாழ்வர். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்.
மதுரைபகுதியில் மகாசிவராத்திரி அன்று குலதெய்வ வழிபாட்டை நடத்துவார்கள். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பங்குனி உத்திர நாளில்தான் குலதெய்வ வழிபாட் டை நடத்துவார்கள். அவர்களில் குலதெய்வமான சாஸ்தா அவதரித்த நாள் இந்த பங்குனி உத்தரம் ஆகும்.
இந்த ஆண்டு 6-ந் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு உத்திரம் தொடங்குகிறது. மறுநாள் காலை 8-22 மணி வரை உத்திரம் உள்ளது. ஆனால் பவுர்ணமி 7-ந் தேதி பகல் 11-22 மணிக்குத்தான் தொடங்குகிறது. எனவே இந்த ஆண்டு பவுர்ணமிக்கு முந்தியே பங்குனி உத்திரம் வந்துவிடுகிறது.