நல்ல இல்லற வாழ்க்கை வேண்டுமா?

செய்தி


பங்குனி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் துவாதசிக்கு தமனாரோபனம் என்று பெயர். அதனை விஷ்ணு தமனம் என்று அழைப்பர். ஏப்ரல் மாதம் 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று வரும் அந்த நாளில் மகாவிஷ்ணுவுக்கு மரிக்கொழுந்தினால் அர்ச்சனை செய்து வணங்கினால் புண்ணியம் கிடைக்கும். மேலும் புதன் தோஷம் உள்ளவர்கள் இந்த வழிபாட்டை நடத்தினால் தோஷம் விலகி நன்மைகள் கிடைக்கும்.
இந்த துவாதசி திதி தோன்றி ஒரு நாழிகை நேரம் ஹரிவாசரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலத்தில் உணவு அருந்துதல் கூடாது. அப்படி உணவு அருந்தாமல் பெருமாளை வணங்கினால் குடும்பம் சிறக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல இல்லற வாழ்க்கை அமையும்.