துயில் எழும்பும் மகாவிஷ்ணு

ஆன்மிக கதைகள்


பாற்கடலில் ஆதிசேஷன் என்ற பாம்பு படுக்கையில்தான் மகாவிஷ்ணு படுத்திருப்பார். அவர் தூங்குவதுபோல் நடித்து உலகத்தை காப்பார் என்பார்கள். ஆனி மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை ஏகாதசி அன்று மகாவிஷ்ணு பாம்பு படுக்கையில் படுப்பார். ஐப்பசி மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை ஏகாதசி துயில் எழுகிறார். இந்த நாளுக்கு ப்ரபதோன ஏகாதசி அல்லது உத்தான எகாதசி என்று பெயர். இந்த சிறப்புக்குரிய நாள் இந்த ஆண்டு நவம்பர் 8&ந் தேதி(வெள்ளிக்கிழமை) வருகிறது.
இதற்கு ஒருநாள் முன் அதாவது தசமி திதி நாளான 7&ந் தேதி வியாழக்கிழமை காலை 11&23 மணிக்குள் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட பெருமாளை வணங்க வேண்டும். மறுநாள் 8&ந் தேதி நடை திறக்கும் முன் பெருமாள் கோவிலுக்குச் சென்று சுப்பரபாதம் பாடி நடை திறந்ததும் பெருமாளை தரிசிக்க வேண்டும். அப்போது பால் நிவேதனம் செய்யலாம். இந்த வழிபாட்டினால் குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி நிலவும்.