சுபநிகழ்ச்சிகளை நடத்தலாம்

இன்றைய & நாளைய சிறப்புகள்


ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 21-ந் தேதி முதல் வைகாசி மாதம் 15-ந் தேதி வரை (4-5-2021 முதல் 29-5-2021 வரை) அக்னி நட்சத்திர காலமாக கருதப்படுகிறது. மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் அக்னி நட்சத்திரம் என்று ஒன்று கிடையாது. வெயிலின் கொடுமை அக்னி (நெருப்பு) போல் கொதிக்கும் நாட்களைத்தான் அக்னி நட்சத்திர நாட்கள் என்று அழைக்கிறோம். இதனை கத்திரி வெயில் என்றும் கூறுவார்கள். இந்த நாட்களில் பலர் சுபநிகழ்ச்சிகளை நடத்தமாட்டார்கள். ஆனால் உண்மையில் அக்னி நட்சத்திர காலங்களில் சுபநிகழ்ச்சிகளை நடத்த தடையேதும் கிடையாது. ஆனாலும் சிலர் தங்கள் மனதில் இந்த காலம் மோசமான காலம் என நினைத்து அந்த காலத்தை தவிர்த்து வருகிறார்கள். நம்பிக்கையை மீறி யாரும் சுபங்களை நடத்தமாட்டார்கள். அதனால் அதை விமர்சிக்க நாம் விரும்பவில்லை. ஆனால் விவசாய பணிகளை மேற்கொள்ள இந்த அக்னி நட்சத்திர நாட்களை பயன்படுத்தக்கூடாது-.