கலியுகம் தொடங்கிய நாள்

ஆன்மிக கதைகள்


தை மாதம் அமாவாசைக்கு பிறகு அடுத்து வரும் அமாவாசைக்கு மாக பகுள அமாவாசை என்று பெயர். இந்த ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி வரும் இந்த அமாவாசைதான் கலியுகம் தொடங்கிய நாள். இன்று மவுன விரதம் இருப்பது நல்லது. இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திருவோணம், வியதீபாத நாமயோகம் ஆகியவை சேர்ந்து அமாவாசை வருவது தனிச்சிறப்பு. சில வருடங்களுக்கு ஒருமுறைதான் இப்படி புண்ணிய நாள் வரும். இன்று தான தர்மங்கள் செய்தால் பல மடங்கு நன்மைகள் கிடைக்கும்..