எள்ளு பொடியை மட்டும் சாப்பிடும் விரதம்

இன்றைய சிறப்புகள் செய்தி


இந்த மாதம் 16-ந் தேதி திங்கட்க்கிழமை காலை 9&51 மணி முதல் மறுநாள் காலை 8-56 மணி வரை அஷ்டமி திதி உள்ளது. இதனை காலாஷ்டமி என்று அழைப்பர். தேய்பிறை அஷ்டமி நாளான அன்று சிவபூஜையையும் கிருஷ்ணனை வழிபடவும் உகந்தநாள். மேலும் இதை திரியம்பகாஷ்டமி என்றும் அழைப்பர். அன்றைய தினம் எள்ளுபொடியை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்க வேண்டும். அன்று சிவபூஜை செய்ய வேண்டும். 17-ந் தேதி காலை 8-56 மணிக்கு விரதத்தை முடிக்கலாம். இந்த விரதத்தை மேற்கொண்டால் இந்த பிறவியில் சகல வசதிகளையும் பெற்று இறுதியில் கைலாச பதவியை அடையலாம்.