இழந்த செல்வத்தை மீண்டும் பெற ராமநவமி பூஜை

இன்றைய & நாளைய சிறப்புகள்


வருகிற 2-4-2020 ராமநவமி வருகிறது. ராமபிரான் அவதரித்த இந்த நாளை நாம் பக்தி சிரத்தையோடு வணங்க வேண்டும். அன்று அருகில் உள்ள ராமர் கோவிலுக்கு செல்லலாம். இல்லையென்றால் பெருமாள் கோவிலுக்கும் செல்லலாம். ராம பக்தரான ஆஞ்சநேயரை வணங்கினா -லும் ராமரின் அருள் கிடைக்கும். அன்றைய தினம் ராமபிரானை வணங்கினால் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். வாழ்க்கையில் பல்வேறு சிறப்புகளை பெறலாம். வீட்டில் பாயாசம் வைத்து பூஜிக்கலாம்.
பிரிந்து சென்ற மனைவியை மீண்டும் அடைய அன்றைய தினம் விரதம் இருக்க வேண்டும். முந்தைய நாளே வீட்டை சுத்தமாக வைத்திருக்கவேண்டும். மேலும் 3 மஞ்சள் கயிறு, 9 மஞ்சள் துண்டை எடுத்துக்கொண்டு பூஜை பொருட்களுடன் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். பின்னர் தாலி-மஞ்சள் ஆகியவற்றை சுமங்கலி பெண்களுக்கு கொடுக்க வேண்டும். அப்போது வளையல் மற்றும் தகுதிக்கு ஏற்ப புத்தாடை போன்றவற்றையும் அவர்களுக்கு கொடுக்கலாம்.
இழந்த செல்வதைபெற இந்த பரிகாரத்தை ராமநவமி அன்று செய்யலாம். முன்தின நாள் ஒரு மஞ்சள் துணியில் பச்சரிசியையும், 21 ரூபாய் நாணயங்களையும் எடுத்து முடிச்சு போடவேண்டும். ஒரு செம்பில் மஞ்சள் தண்ணீர் கலந்த தண்ணீரில் அந்த பொட்டலத்தை போட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வீட்டில் பூஜையில் அதை எடுத்து வைக்க வேண்டும். பூஜையில் ராமர் படத்தை வைத்து பூஜிக்க வேண்டும். 108 ராம ஜெயம் மந்திரத்தை எழுதவேண்டும். பின்னர் பொட்டலத்தில் உள்ள அரிசியை காக்கை, குருவிகளுக்கு போட வேண்டும். அந்த காசுகளை வீட்டில் பணப்பெட்டியில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வரவும். இப்படி செய்தால் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம்.