இந்த மாதம் நிகழும் சந்திர கிரகணம் பரிகாரம் செய்ய வேண்டியவர்கள்

செய்தி

இந்த விகாரி ஆண்டில் சந்திர கிரகணம் 2, சூரிய கிரகணம் 2 என மொத்தம் 4 கிரகணங்கள் நிகழ்கின்றன. இவற்றில் ஒரு சந்திர கிரகணமும், ஒரு சூரிய கிரகணமும் இந்தியாவில் தெரியம்.
இன்று (2/7/2019) செவ்வாய்க் கிழமை பகுதி நேர சூரிய கிரகணம் ஏற்படும். இது இந்தியாவில் தெரியாது. எனவே இதற்கு பரிகாரம் எதுவும் தேவை இல்லை.
அடுத்து வருகிற 16,7,2019 அன்று அதாவது ஆனி மாதம் 31&ம் நாள் செவ்வாய்க் கிழமை பவுர்ணமி திதி உத்திராடம் நட்சத்திரம் 2ம் பாதம் மகர ராசியில் மேஷ லக்கிணம் கேது கிரஸ்தம் தூம்ரவர்ணம் சிகப்பு நிறம் தட்சிணாயம் கிரீஷ்ம ருதுவில் வடமேற்கே பார்சுவ சந்திர கிரகணம் பிடித்து தென் கிழக்கே பிரதமையில் விடுகிறது-.
சந்திர கிரகணம் நள்ளிரவு 1/32 மணிக்கு ஆரம்பமாகிறது. மத்திய காலம் இரவு 3/01 மணி. கிரகண முடிவு காலம் இரவு(அதாவது 17/7/2019 அதிகாலை) 4/30 மணி.
இந்த சந்திர கிரகணத்தால் செவ்வாக்கிழமை பிறந்தவர்கள், ரோகணி, அஸ்தம், பூராடம், உத்திராடம், திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும்.
சந்திர கிரகணத்துக்கான சுலோகம்.
“இந்த்ரோ அநலோ யமோ ரிஷோ
வருணோ
வாயு ரேவச குபேர ஈசோக்நந்து இந்து
உபராக உத்தவ்யதாம் மம றீறீ”
என்ற மந்திரத்தை செப்புத் தகடு அல்லது தாளில் எழுதி கையில் கட்டிக் கொண்டு குளிக்க வேண்டும்.
அன்றைய தினம் அதாவது 16/7/2019 செவ்வாய்கிழமை நடு இரவு மணி 12/15 மணி முதல் அதிகாலை 4/40 மணி வரை சந்திரனை பார்க்க கூடாது. அதன்பின் சந்திர தரிசனம் செய்யலாம்.
கோவில் மற்றும் வீட்டை 17/7/2019 புதன் கிழமை காலை 6 மணிக்கு சுத்தம் செய்து குளித்து அவரவர்கள் சம்பிராதயப்படி பூஜை செய்யவேண்டும்.
அடுத்த சூரிய கிரகணம் மார்கழி மாதம் 10&ந் தேதி அதாவது 26&12&2019 வியாழக்கிழமை சூரிய கிரகணம் ஏற்படும். இது இந்தியாவில் தெரியும். அமாவாசை திதி மூலம் நட்சத்திரம் 2&ம் பாதம் மகர ராசி மேஷ லக்கினம் கேது கிரஸ்தத்தில் இந்த சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணத்தின் ஆரம்ப காலம் காலை 8&09 மணி. கிரகணத்தின் மத்திய காலம் காலை 9/44 மணி. சூரிய கிரகணத்தன் முடிவு காலம் காலை 11/19 மணி.
மார்கழி மாதம் 25ந் தேதி 10/1/2020 வெள்ளிக்கிழமை இரவு நேர சந்திர கிரகணம் ஏற்படுகிறது. ஆனால் இது இந்தியாவில் தெரியாது.