ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர்

ஆன்மிக கதைகள்

வில்லிபுத்தூர் என்றதும் ஆண்டாள் நினைவுக்கு வரும், இந்த கலியுகத்தில் மானிடப் பிறவியாய் பிறந்து இறைவனை மணந்த நாயகி, அவளை பூமி பிராட்டியின் அவதாரம் என்கிறது புராணம்,
வியாசர் வடமொழியில் எழுதிய மகாபாரத்தை தமிழில் எழுதிய வில்லிபுத்திரார் இந்த ஊரில்தான் பிறந்தவர், அதனால்தான் அவருக்கு இப்பெயர் வந்தது.
இந்த _வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதரிக்கும் முன்பே சீறு
ம் சிறப்பும் பெற்று விளங்கியது, இன்னும் சொல்லப்போனால் புராண கால பெருமையை தன்னகத்தே கொண்டது இவ்வூர்.
மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சகனை வதம் செய்த இடம் என்று கூறுவர். பெருமாள் வராக உருவத்தில் தேவியை தன் மடியில் வைத்துக் கொண்டு அவருக்கு நம்பாடுவான் போன்ற பக்தர்களின் கதையை சொன்ன இடம் இது என்றும் கூறுவர்.
முன்னொரு காலத்தில் இந்த பகுதி செண்பக கடாக இருந்தது. அப்போது மல்லி என்ற பெண் இந்த பகுதியை ஆண்டு வந்ததால் இது மல்லிக்காடு என்ற பெயரை பெற்று இருந்தது. மல்லி ராணிக்கு வில்லி. கண்டன் என்ற இரண்டு மகன்கள் உண்டு. அவர்கள் இருவரும் ஒரு நாள் வேட்டைக்குச் சென்றனர்.
நடுக்காட்டில் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர், இதில் கண்டன் புலி ஒன்றினால் கொல்லப்பட்டான், அவன் சாகும்போது பெருமாள் மந்திரத்தை சொல்லி மோட்சம் பெற்றான், காணாமல் போன கண்டனை தேடி வில்லி தேடினான்,அந்த களைப்பில் அயர்ந்து தூங்கினான். அப்போது பெருமாள் கனவில் தோன்றி கண்டன் பிணமாக கிடக்கும் இடத்தை சொன்னார். மேலும் அந்த இடத்தில் தனக்கு கோவில் கட்டுமாறும் பணித்தார், கண்விழித்த வில்லி பெருமாள் கனவில் சொன்ன இடத்துக்குச் சென்று கண்டனுக்கு இறுதிச் சடங்கை நடத்தினான். பின்னர் அந்த இடத்தில் காட்டை நாடாக்கி கோவில் எழுப்பினார்.
அந்த ஊரை உருவாக்கிய வில்லி பெயரிலேயே வில்லிபுத்தூர் என்ற அழைக்கப்படுகிறது.

ஆண்டாள் அவதாரம்

இவ்வளவு சிறப்பு மிக்க இத்தலத்தில் ஆண்டாள் அவதராம் எடுத்தாள். வராக அவதாரத்தில் இங்கு தேவியை மடியில் அமர்த்தி பக்தர்களின் கதையை சொன்னார் அல்லவா? அப்போது பிராட்டி இங்கு அவதாரம் எடுக்க விரும்புவதாக தெரிவித்தார். அதற்கான காலம் நெருங்கியது,
மகாவிஷ்ணு தன் வாகனமாக கருடனை அழைத்து _வில்லிபுத்தூரில் முகுந்தர் என்பவருக்கு மகனாக பிறக்க பணித்தார், அதன்படி அந்த ஊரில் பெருமாள் கோவிலுக்கு கைங்கரியம் செய்யும் முகுந்தருக்கு மகனாக பிறந்தார், அந்த மகனுக்கு விஷ்ணுசித்தர் என்று பெயர் சூட்டினார் முகுந்தர். விஷ்ணுசித்தர் நந்தவனம் அமைத்து இறைவனுக்கு பூமாலை தொடுத்து அணிவித்தார். அதோடு பாமாலையும் பாடி உருகினார். அவருக்கு விரைஜ என்ற பெண்ணை மணமுடித்து வைத்தனர்,
விஷ்ணுசித்தரின் நந்த வனத்தில்தான் பிராட்டி சிறு குழந்தையாக அவதாித்து கிடந்தாள். அவளை விஷ்ணுசித்தர் எடுத்து மகளாக வளர்த்தார். விஷ்ணுசித்தர்தான் பபெரியாழ்வாராக பின்னாளில் போற்றப்பட்டார்.
அவர் வளர்த்த பெண்தான் ஆண்டாள். தந்தையும் மகளும் பெருமாளை பற்றி எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளனர். அவர்கள் இருவரும் பன்னிரு ஆழ்வார்கள் வரிசையில் இடம் பெற்றனர். ஆண்டாள் கண்ணன் பால் காதல் கொண்டு பல்வேறு பாடல்களை பாடினாள். இறுதியில் பெருமாளையே மணந்தார். ஸ்ரீரங்கத்தில் ஆண்டாளை ஏற்றுக்கொண்டாலும் பெரியாழ்வார் வேண்டு கோளின்படி பெருமாள் இந்த தலத்தில் எழுந்தளினார்.

இத்தலம் 108 திவ்ய தேசங்களில் 88 வதாக போற்றப்படுகிறது, இங்குள்ள பெருமாள் வடபத்திரசாயி(ரெங்கமன்னார்) கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறhர். தயார் ஆண்டாள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம்தான் தமிழக அரசின் சின்னமாக விளங்குகிறது.

-கடையம் பாலன்.