ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்

ஆலய சிறப்புகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவள் ஆண்டாள். பெரியாழ்வார் என்று புகழப்படும் விஷ்ணுசித்தர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இறைபணி செய்து கொண்டிருந்தார். தினமும் ரங்கமன்னாருக்கு மாலை தொடுத்துக் கொடுத்து பாமாலையும் பாடி வழிபட்டு வந்தார். ஒருநாள் அவர்கள் பூப்பறிக்க சென்ற போது துளசி மாடத்தில் பெண்குழந்தையை கண்டு ஆச்சரியமடைந்தார். அவளுக்கு ஆண்டாள் என்று பெயரிட்டு வளர்த்தாள். கண்ணனின் கதையை கேட்ட ஆண்டாள் அவனது விளையாட்டி மெய்மறந்து அவனை காதலிக்க தொடங்கினாள்.அனையே பற்றியே பாடுவாள். அவனையே தொழுவாள்.
குழந்தை பருவத்தில் தந்தை ரங்கமன்னாருக்காக தொடுத்து வைத்திருந்த மாலையை ஆண்டாள் அணிந்து அழகு பார்ப்பாள். மகள் சூடியது தெரியாமல் அதையே பெருமாளுக்கு அணிவிப்பார். ஒரு நாள் ஆண்டாள் மாலை சூடி அழகு பார்ப்பதை கண்டு வேதவை அடைந்தார். பெரியாழ்வார் பார்த்து விட்டு மகனை திட்டி வேறு ஒரு மாலை தொடுத்து பெருமாளுக்கு அணிவித்தார். அந்த மாலை அறுந்து விழுந்து விட்டது. பின்னர் ஆண்டாள் சூடிய மாலையை அணிவித்தார். அது நிலைத்து இருந்தது. மேலும் பெருமாள் ஆண்டாள் சூடிய மாலையையே தான் விரும்புவதாக கூறினார். இதனால் ஆண்டாளுக்கு சூடி கொடுத்த சுடர் கொடியாள் என்று பெயர் வந்தது.
பருவம் வந்ததும் ரங்கநாதரையே மணக்க விரும்பினாள். தன் எண்ணத்தை தந்தையிடம் கூறினாள். இது நடக்கக்கூடிய காரியமா? என்று பெரியாழ்வார் வினவினார். ஒரு நாள் ஸ்ரீரங்கநாதர் கனவில் வந்த ஸ்ரீரங்கம் வரும்படியும் அங்கு ஆண்டாளை மணந்து கொள்வதாகவும் கூறினார். அதே போல் ஆண்டாள் தன்தந்தையுடன் மணக்கோலத்தில் ஸ்ரீரங்கம் சென்றாள். அங்கு ரங்கநாதர் ஆண்டாளை தன்னுடன் அழைத்துச் சென்றார்.
ஆண்டாள் அவதரித்த நாள் ஆடிப்பூரம். அன்றை நாள் ஆண்டாள் சன்னதிக்கு சென்று வழிபட்டாள் விரும்பிய வரண் கிடைக்கும். குறிப்பாக பெண்கள் விரதம் இருந்து ஆண்டாளை வணங்கினால் நல்ல கணவர் கிடைப்பார்.

ஆண்டாள் மாலை
ஆண்டாள் சூடிய மாலையைத்தான் பெருமாள் ஏற்றுக் கொண்டார். அதை நினைவுபடுத்தும் விதமாக தினமும் இரவு ஆண்டாளுக்கு சூடிய மாலைத்தான் மறுநாள் ரங்கநாதருக்கு அணிவிப்பார்கள். இதற்காக தினமும் ஆண்டாள் சன்னதி முன்பு காராம்சுவை நிறுத்துவார்கள். ஆண்டாள் தினமும் அந்த பசுவை பார்த்து கண்திறப்பதாக ஐதீகம். அதன்பின் ஆண்டாளுக்கு முன்தின நாள் இரவில் சூட்டிய மாலையை எடுத்து பெருமாளுக்கு அணிவிப்பார்கள்,
மதுரை சித்திரை திருவிழாவின் போது அழகருக்கு ஆண்டாள் சூடிய மாலை கொண்டு செல்லப்பட்டு அணிவிக்கப்படும். அதேபோல் திருப்பதி பிரமோற்சவத்தின்போதும் இங்கிருந்து ஆண்டாள் சூடிய மாலை கொண்டு செல்லப்பட்டு பெருமாளுக்கு அணிவிக்கப்படும்-

பெரியாழ்வார் வணங்கி சாமி சிலை
பெரியாழ்வார் தனது Pவீட்டில் லட்சுமி நாராயணர் சிலையை வைத்து வணங்கி வந்தார். அந்த சிலை தற்போது ஆண்டாள் கோவிலில் தனி சன்னதியில் உள்ளது. இங்கும் வழிபாடு நடத்தபடுகிறது.

ஆண்டாள் கிளி

ஆண்டாள் கிளி

வில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு தினமும் கிளி செய்து கையில் வைப்பார்கள். ஒரு நாள் வைத்த கிளியை மறு நாள் வைக்க மாட்டார்கள். அந்த கிளியை பக்தர்கள் வாங்கிச் செல்வார்கள். திருமணம் கைகூட அந்த கிளியை வாங்கிச் செல்வார்கள்.

ஆண்டாள் கிணறு

பெரியாழ்வார் பெருமாளுக்கு தொடுத்து வைத்திருந்த மாலையை ஆண்டாள் தான்சூடி அழகு பார்த்தாள். அந்த மாலையைத்தான் பெருமாளும் ஏற்று கொண்டார். ஆண்டாள் மாலையை சூடி ஒரு கிணற்றில் தண்ணீருக்குள் தன் அழகை பார்த்து ரசிப்பாள். அந்த கிணறு இப்போதும் _வில்லிபுத்தூர் கோவிலில் உள்ளது. அந்த கிணற்றை புனிதமாக கருதி பக்தர்கள் வணங்கி வருகிறார்கள்.