அக்கினி நட்சத்திரம்

இன்றைய & நாளைய சிறப்புகள்


கோடை காலத்தின் உச்சக்கட்டம் தான் அக்கினி நட்சத்திர என்றும் கத்திரி வெயில். இந்த வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் நாட்களை நம்முன்னோர்கள் அக்கினி நட்சத்திர காலம்(கத்திரி வெயில்) என்று குறிப்பிட்டு உள்ளனர், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 21-ந் தேதி தொடங்கி வைகாசி மாதம் 15-ந் தேதி முடிவடையும். இந்த ஆண்டு ஆங்கில மாதம் மே 4-ந் தேதி தொடங்கி 29-ந் தேதிவரை நீடிக்கிறது.
இந்த கத்திரி வெயில் காலத்தில் சுப நிகழ்ச்சிகளைநடத்தக் கூடாது என்று பலர் கூறி வருகின்றனர். அது தவறு. இந்த காலத்திலும் சிற்சில நல்ல காரியங்களை நடத்தலாம் என்று ஜோதிட வல்லுநர்கள் கணித்து வைததுள்ளனர். ஆனால் சிலவற்றை மட்டும் இந்த நாட்களில் நடத்தக் கூடாது என்றும் கூறிவைத்துள்ளனர்.
இந்த காலத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை எந்தவித தயக்கமும் இன்றி நடத்தலாம். மேலும் உபநயனம். யக்ஞம் மற்றும் சத்திரம் அமைப்பது போன்ற காரியங்களை தயக்கமின்றி தொடங்கலாம்.
அதே நேரம் வீடு கட்ட தொடங்குவது நிலம் வாங்குவது போன்றவற்றை இந்த காலத்தில் தவிர்க்க வேண்டும். விவசாயிகள் இந்த காலத்தில் புதிய பயிர் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். செடிகளை நடுவது, விதை விதைப்பது, தோட்டம் அமைப்பது, குளம், குட்டை.,கிணறு வெட்டுதல் போன்ற காரியங்களை செய்யக்கூடாது. மேலும் இந்த கத்திரி வெயில் காலத்தில் மரங்களையும் செடிகளையும் வெட்டவும் கூடாது. மட்டைகளில் இருந்து நார்உரிப்பதையும் தவிர்க்க வேண்டும். காண்டிராக்டர்கள் அடுக்கு மாடி குடியிருப்புகளையோ அல்லது புதிய நகரையோ இந்த காலத்தல் உருவாக்க கூடாது. புதிய வாகனங்கள் ஓட்டும் பயிற்சியை இந்த காலத்தில் ஆரம்பிக்க கூடாது. குருவிடம் இருந்து தீட்சை எடுப்பதையும் இப்போது செய்ய வேண்டாம்.
மேற்கண்டவை ஜோதிட ரீதியாக கருத்துக்கள். அதில் விஞ்ஞான பூர்வமான தத்துவமும் அடங்கி இருக்கிறது. கோடைகாலத்தில் பொதுவாக விவசாய பணிகளை தவிர்க்க வேண்டும் என்றுதான் அதிக அளவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. வெயில் அதிகமாக உள்ள காலத்தில் எந்த விவசாய பணிகளை தொடங்கினாலும் அது சிறப்பாக அமையாது. குறிப்பாக நிலத்தில் விதை விதைத்தால் அது முளைக்காமல்கூட போகவலாம்.
இது தவிர கிராமங்களில் முன்னேழு பின் ஏழு நாட்கள் என்றும் சொல்வார்கள். இது அக்கினி நட்சத்திர நாட்களுக்கு முன் 7 நாட்களும் அன்கினி நட்சத்திரம் முடிந்த பின் 7 நாட்களும் தொடர்ந்து வெயில் கடுமையாக இருக்கும் என்பதைதான் இதை சொல்கிறார்கள்.